ஆசிய கோப்பையில் சதம்: டி20 தரவரிசையில் 15வது இடத்திற்கு முன்னேறிய கோலி

2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் ஐசிசி டி20 தரவரிசையில் விராட் கோலி 14 இடங்கள் முன்னேறியுள்ளார்.;

Update: 2022-09-14 09:45 GMT

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய கோப்பை 2022 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தனது முதல் டி20 சதத்தை அடித்த இந்திய வீரர் விராட் கோலி, டி20 பேட்ஸ்மென் தரவரிசையில் 14 இடங்கள் முன்னேறி 15-வது இடத்திற்கு வந்துள்ளார்.

முன்னதாக, கோஹ்லி கடந்த சில மாதங்களாக ஃபார்மில் இருந்த சரிவைத் தொடர்ந்து 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இருப்பினும், 33 வயதான அவர், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானுக்குப் பிறகு ஆசியக் கோப்பையில் அதிக ரன்களை எடுத்த இரண்டாவது வீரரானார். 

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சதம் தவிர, கோலி ஹாங்காங் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் அரைசதம் அடித்தார்.

டி20 பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவும் மூன்று இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆசிய கோப்பையில் போட்டியின் ஆட்டநாயகனாக ஆன பிறகு ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஏழு இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்தார்.

Tags:    

Similar News