விராட் கோலி செய்த வெறித்தனமான ரெக்கார்டு! இனி ஒருத்தன் பொறந்து வரணும்!
இதுவரை விராட் கோலி, வார்னர், தவான், காம்பிர் ஆகியோர் 12 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்துள்ளனர். இப்போது விராட் கோலி 13வது அணிக்கு எதிராகவும் அரைசதம் அடித்துவிட்டார். இதன்மூலம் விராட் கோலி தற்போது விளையாடி வரும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் அரைசதம் அடித்துவிட்டார்.;
ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் எல்லா அணிகளுக்கு எதிராகவும் அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. இதுவரை 12 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக விராட் கோலி அரைசதம் அடித்திருந்தார். இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராகவும் அரை சதம் அடித்து தற்போது விளையாடி வரும் எல்லா அணிகளுக்கு எதிராகவும் அரைசதம் அடித்த சாதனையை படைத்துள்ளார்.
இதுவரை விராட் கோலி, வார்னர், தவான், காம்பிர் ஆகியோர் 12 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்துள்ளனர். இப்போது விராட் கோலி 13வது அணிக்கு எதிராகவும் அரைசதம் அடித்துவிட்டார். இதன்மூலம் விராட் கோலி தற்போது விளையாடி வரும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் அரைசதம் அடித்துவிட்டார்.
ஆனால் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு எதிராக விராட் கோலி அரைசதம் அடித்ததில்லை. அந்த அணிக்கு எதிராக விராட் இரண்டு ஆட்டங்களில் ஆடியுள்ளார். அதன் பிறகு அந்த அணி ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இப்போது விளையாடிக் கொண்டிருந்தால் அந்த அணிக்கு எதிராகவும் அரைசதம் அடித்திருப்பார் விராட்.
விராட் கோலி Vs சென்னை சூப்பர் கிங்ஸ் | Virat kohli Vs Chennai Super Kings
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இதுவரை 9 அரை சதங்களை அடித்துள்ளார் விராட் கோலி. மொத்தம் 30 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 979 ரன்களை சென்னை அணிக்கு எதிராக அடித்துள்ளார். இதுதான் ஒரு அணிக்கு எதிராக ஒரு வீரர் அடித்த அதிகபட்ச அரைசதமாகவும் பதிவாகியுள்ளது.
விராட் கோலி Vs டெக்கான் சார்ஜஸ் | Virat kohli Vs Deccan Charges
11 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி, டெக்கான் சார்ஜஸ் அணிக்கு எதிராக 3 அரை சதங்கள் அடித்துள்ளார். டெக்கான் சார்ஜஸ் அணிக்கு எதிராக இதுவரை 306 ரன்கள் எடுத்திருக்கிறார் விராட்.
விராட் கோலி Vs டெல்லி கேப்பிட்டல்ஸ் | Virat kohli Vs Delhi capitals
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக இதுவரை 8 அரைசதங்கள் அடித்துள்ளார். மொத்தம் 26 போட்டிகளில் விளையாடி 925 ரன்கள் எடுத்திருக்கிறார் விராட் கோலி.
விராட் கோலி Vs குஜராத் லயன்ஸ் | Virat kohli Vs Gujarat Titans
மொத்தம் 5 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, இந்த அணிக்கு எதிராக 283 ரன்களும் 1 அரைசதமும் அடித்திருக்கிறார்.
விராட் கோலி Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | Virat kohli Vs Kolkata knight riders
31 போட்டிகளில் ஆடி, மொத்தம் 4 அரைசதங்களை அடித்திருக்கிறார் விராட் கோலி. கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் அடித்த மொத்த ரன்கள் 807.
விராட் கோலி Vs மும்பை இந்தியன்ஸ் | Virat kohli Vs Mumbai Indians
விராட் கோலி மும்பைக்கு எதிராக மொத்தம் 31 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தம் 851 ரன்கள் எடுத்துள்ள இவர் அடித்த அரைசதங்கள் 5.
விராட் கோலி Vs குஜராத் டைட்டன்ஸ் | Virat kohli Vs Gujarat titans
இதுவரை 2 போட்டிகளில் ஆடியிருக்கும் விராட் கோலி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் அரை சதம் அடித்திருக்கிறார். மொத்தம் 131 ரன்கள் அந்த அணிக்கு எதிராக பதிவு செய்துள்ளார்.
விராட் கோலி Vs பஞ்சாப் கிங்ஸ் | Virat kohli Vs Punjab kings
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 802 ரன்கள் எடுத்திருக்கும் விராட் கோலி, 29 ஆட்டங்களில் 2 அரை சதங்கள் விளாசியிருக்கிறார்.
விராட் கோலி Vs ராஜஸ்தான் ராயல்ஸ் | Virat kohli Vs Rajasthan royals
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் 27 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார் விராட் கோலி. மொத்தம் 600 ரன்கள் எடுத்திருக்கும் அவர் 4 அரைசதங்களை பூர்த்தி செய்திருக்கிறார்.
விராட் கோலி Vs ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் | Virat kohli Vs rising pune supergiants
ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணிக்கு எதிராக 4 ஆட்டங்களில் ஆடி, 2 அரைசதங்களை அடித்துள்ளார்.
விராட் கோலி Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | Virat kohli Vs sun risers hyderabad
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 20 போட்டிகளில் ஆடி 4 அரைசதங்கள் அடித்துள்ளார். மொத்தம் 569 ரன்கள் எடுத்திருக்கிறார்.
விராட் கோலி Vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | Virat kohli Vs Lucknow Super Giants
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக முதல் அரைசதத்தை பதிவு செய்துள்ளார். இதுவரை 3 ஆட்டங்களில் ஆடியிருக்கிறார்.