முன்னாள் தடகள வீரர் மில்காசிங் காலமானார்
முன்னாள் தடகள வீரரும், பறக்கும் சீக்கியர் என அறியப்பட்டவருமான மில்கா சிங் காலமானார்;
பறக்கும் சீக்கியர் என அறியப்பட்ட மில்கா சிங்
ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை பெற்றுத் தந்து இந்தியாவிற்கு பெருமை சேர்ந்தவர் முன்னாள் வீரர் மில்கா சிங். மின்னல் வேகத்தில் ஓடும் இவர் பறக்கும் சீக்கியர் என அழைக்கப்பட்டார்.
கடந்த மே மாதம் கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து உடல் பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதியானது. சண்டிகரில் உள்ள மருத்துவமனையின் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 90
மில்காசிங் மறைவுக்கு பஞ்சாப், அரியானா மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு பிரபலங்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர்.