நோ பால்... அம்பயர் அடித்துக் கொலை! விளையாட்டால் விபரீதம்!

நோ பால் என்று கூறியதால் அம்பயர் அடித்துக் கொள்ளப்பட்ட சம்பவம் கிராமம் ஒன்றில் நடந்தேறியுள்ளது. இது மிகப் பெரிய பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறது.

Update: 2023-04-03 10:11 GMT

நோ பால் என்று கூறியதால் அம்பயர் அடித்துக் கொள்ளப்பட்ட சம்பவம் கிராமம் ஒன்றில் நடந்தேறியுள்ளது. இது மிகப் பெரிய பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறது.

விளையாட்டு விபரீதமாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதை உண்மையாக்கும் வகையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள சௌத்வார் பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. நோ பால் என்று கூறியதால் வாக்குவாதத்தில் தொடங்கிய சண்டை கைகலப்பில் பேட்டால் தலையைத் தாக்கி கொலையில் முடிவடைந்துள்ளது.

ஒடிசா மாநிலம் மன்ஹிசலந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் லக்கி ரவுட் எனும் 22 வயது இளைஞர். உள்ளூரில் அவ்வப்போது நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வரும் இவர் நேற்றைய தினமும் வழக்கம்போல விளையாட சென்றிருக்கிறார்.

பொதுவாக கிராமங்களில் விளையாடச் செல்பவர்கள் விளையாடிவிட்டு அப்படியே வேலைக்கு, தொழிலுக்கு போகலாம் என்று கிரவுண்டுக்கு வருவார்கள். அப்படி சிலரும் மாணவர்களுடன் விளையாட வந்திருக்கிறார்கள். பேட்டிங் செய்யும் அணியிலிருந்து ஒருவர் அம்பயராக நிற்பது வழக்கமான நடைமுறைதான்.

ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் பேட்டிங் செய்வதும், ஃபீல்டிங்க் செய்வதுமாக இருந்தனர். அப்போது லக்கி ரவுட் அம்பயராக நிற்க கேட்டுக்கொள்ளப்பட்டார். அவரது அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில், எதிரணி பவுலிங் செய்தது.

பந்து வீசிக்கொண்டிருந்தவர் போட்ட பந்து நோ பாலாக வந்து விழ நடுவரும் நோ பால் என்று காட்டியிருக்கிறார். ஆனால் இது நோ பால் இல்லை என பவுலிங் செய்த அணியினர் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். அதேநேரம் பேட்டிங் செய்த அணியினர் நடுவராக நின்ற இளைஞரை நோ பால் தானே என்று கேட்டு குடைந்தனர்.

இந்த வாக்குவாதம் முற்றவே அது கைகலப்பில் போய் முடிந்தது. இதனை தடுத்து நிறுத்த சிலர் முற்பட்டும் சண்டையிட்டுக் கொண்டே இருந்ததால் அவர்களும் கடுப்பாகி வேடிக்கை மட்டும் பார்த்தனர். இந்நிலையில் திடீரென்று ஸ்முதிரஞ்சன் என்பவர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி லக்கியை தரையில் தள்ளினார். இதனால் பதறிப்போன மற்றவர்கள் உடனடியாக அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

வேக வேகமாக வந்து மருத்துவமனையில் சேர்த்தபோதும் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் அந்த பகுதி பரபரப்பானது. குற்றவாளியை பொதுமக்களே பிடித்து காவல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு முன்பகை ஏதும் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News