ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து : ரியல் மாட்ரிட் சாம்பியன்
UEFA Champions League Final 2022 ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப்போட்டியில் லிவர்பூல் அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி 14-வது முறையாக சாம்பியன்;
UEFA Champions League Final 2022 ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி போட்டியில் லிவர்புல் -ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தயில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர் .இரு அணி வீரர்களும் முதல்பாதியில் போராடியும் கோல் அடிக்க முடியவில்லை .இதனால் ஆட்டத்தின் முதல் பாதி 0-0 என்ற கணக்கில் இருந்தது .
இதனை தொடர்ந்து தொடங்கிய 2வது பாதியில் ஆட்டத்தின் 59 வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் வினி ஜேஆர் ஒரு கோல் அடித்தார் .இதனால் ரியல் மாட்ரிட் அணி 1-0 என முன்னிலை பெற்றது . இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி வீரர்கள் கடைசி வரை போராடியும் பலனில்லை .
UEFA Champions League Final 2022 இதனால் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் பட்டம் வென்றது .இது அந்த அணி வெல்லும் 14-வது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டம் ஆகும்