பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் மாநிலத்தில் அங்கீகாரம் கிடைக்கும் - அனுராக் தாக்கூர்

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஹிமாச்சலப் பிரதேசம் மஜ்ரெய்ன் சிர்மூரில் ஹாக்கி ஆஸ்ட்ரோடர்ஃப் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-05-09 00:55 GMT

இமாச்சலப் பிரதேச மக்கள் விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கான இயற்கையான திறமைகளைக் கொண்டுள்ளனர், அதைப் பயன்படுத்துவதற்கான அனைத்து வசதிகளையும் வழங்க இந்திய அரசு உறுதியாக உள்ளது என்று. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள சிர்மோர் மஜ்ராவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹாக்கி ஆஸ்ட்ரோடர்ஃப் மைதானத்துக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் இதனைத் தெரிவித்த தாக்கூர்,

பெண்கள் தங்கும் விடுதி, மாற்று அறைகள், கழிவறைகள், பயிற்சி வசதிகள் போன்ற வசதிகளுடன் கூடிய இந்த ஹாக்கி புல்தரைக்கு ரூ.6 கோடி செலவிடப்படும் என்று கூறினார். வளரும் வீரர்களை அங்கீகரிக்க மாநில அரசு திறன் மிகுந்தவர்களை அடையாளம் காணலாம் என்று அவர் பரிந்துரைத்தார். மாநிலத்தின் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் உள்ள வீரர்கள். கட்கா, களரிபயட்டு, தங்-தா, மல்லகம்பா மற்றும் யோகாசனம் ஆகிய ஐந்து பாரம்பரிய விளையாட்டுகள், வரவிருக்கும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2021 –ல் இடம்பெறும் என்றும், அவற்றை உலக அரங்கில் பிரபலப்படுத்த இந்திய அரசு உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார். பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் மாநிலத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என்றார் அமைச்சர். பௌண்டா சாஹிப்பில் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்படும் என்றார்.

பெங்களூரில் இந்த ஆண்டு சமீபத்தில் முடிவடைந்த கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தேசிய சாதனைகள் மற்றும் 76 பல்கலைக்கழக விளையாட்டுகளின் முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டன, இது நமது இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

அரியானா, பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய பிராந்தியத்தில் அமைச்சரின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் இன்று நிறைவடைந்தது. தாக்கூர் சனிக்கிழமை ஹரியானா முதல்வர் மனோகர் லால் மற்றும் பிற உயரதிகாரிகளுடன் இணைந்து 2021 கேலோ இந்தியா யூத் கேம்ஸ் லோகோ, கீதம், சின்னம் மற்றும் ஜெர்சியை பஞ்ச்குலாவில் (ஹரியானா) உள்ள இந்திரதனுஷ் ஆடிட்டோரியத்தில் வெளியிட்டார்.

Tags:    

Similar News