டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குதிரையேற்றம்- 62 வயதில் பதக்கம் வென்று சாதித்த வீரர்
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குதிரையேற்றம் குழு போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 62 வயதான ஆண்ட்ரூ ஹோய் வெள்ளி பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குதிரையேற்றம் குழு போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 62 வயதான ஆண்ட்ரூ ஹோய் வெள்ளி பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குதிரையேற்றம் குழு போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 62 வயதான ஆண்ட்ரூ ஹோய் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குதிரையேற்றம் குழு போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ ஹோய் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
இதன்மூலம் வெற்றிக்கு வயது ஒரு தடையில்லை என்பது அவர் நிரூபித்துள்ளார். அத்துடன் 1968க்கு பிறகு பதக்கம் வென்ற வயதான நபர் என்ற சாதனையையும் செய்துள்ளார். அத்துடன் ஆண்ட்ரூ ஹோய் இதுவரை 3 தங்கம் உள்பட 5 பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஒலிம்பிக் வரலாற்றில் மிக வயதான பதக்கம் வென்றவர் என்ற சாதனையை 1968 ஒலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற லூயிஸ் (66) வைத்துள்ளார்.