ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் இன்றைய (ஜூலை 30) போட்டிகள்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஜூலை 30 ம் தேதி இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளுக்கான அட்டவணை விபரம்;
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஜூலை 30ம் தேதியான இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளுக்கான போட்டிகள் அட்டவணை
ஜூலை 30 போட்டிகள் அட்டவணை:
இந்தியாவின் ராஹி சர்னோபட், மனு பாகர் 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பெண்கள் தகுதி தேர்வு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டி காலை 5:30 மணிக்கு நடக்கிறது.
பெண்களின் பிரிவில் தனிநபர் வில்வித்தை போட்டிகளில் 1/8 நீக்குதல்களில் ஆர்.ஓ.சியின் தீபிகா குமாரி Vs சேனியா பெரோவா க்கு இடையில் காலை 6:00 மணிக்கு போட்டிகள் நடக்கிறது.
ஆண்களின் பிரிவில் 3000 மீ தடகள ஸ்டீப்பிள்சேஸ் சுற்று 1 – 6:17 முற்பகல் மணிக்கு இந்தியாவின் அவினாஷ் முகுந்த் சேபிள் கலந்து கொள்கிறார்.
பெண்கள் ஹாக்கி பிரிவில் இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு இடையிலான போட்டிகள் காலை 8:15 மணிக்கு நடக்கிறது.
குத்துசண்டை மகளிர் பிரிவில் 16 வது சுற்று போட்டி இந்தியாவின் சிம்ரஞ்சித் கவுர் மற்றும் தாய்லாந்தின் சுடபோர்ன் சீசோன்டி இடையேயான 57-60 கிலோ பிரிவுப் போட்டி காலை 8:18 மணிக்கு நடக்கிறது.
தடகள போட்டியில் இந்தியாவின் எம்.பி. ஜபீர் ஆண்கள் பிரிவில் 400 மீ தடை ஓட்டச் சுற்று 1ல் காலை 8:27 மணிக்கு கலந்து கொள்கிறார்.
காலை 8:52 மணிக்கு ஆண்களின் பிரிவு கோல்ஃப் போட்டிகள் தனிப்பட்ட ஸ்ட்ரோக் ப்ளே சுற்று 2 இல் இந்திய வீரர் அனிர்பன் லஹிரி கலந்து கொள்கிறார்.
துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவு போட்டியில் இந்தியாவின் வீரர் 25 மீ பிஸ்டல் மகளிர் இறுதிப் போட்டி காலை 10:30 மணிக்கு நடக்கிறது. முதலில் நடக்கும் போட்டியின் தகுதிக்கு உட்பட்டது.
படகுப் போட்டிகளில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் ஆண்கள் ஒரு நபர் டிங்கி – லேசர் – ரேஸ் 09 இல் காலை 11:05 மணிக்கு நடக்கிறது. அதைத் தொடர்ந்து ரேஸ் 10- ல் கலந்து கொள்கிறார்.
கோல்ஃப் போட்டி காலை 11:09 மணிக்கு ஆண்களின் தனிப்பட்ட ஸ்ட்ரோக் ப்ளே சுற்று 2 இல் உதயன் மானே கலந்து கொள்கிறார்.
பூப்பந்து மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து மற்றும் அகானே ஜப்பானின் அகானே யமகுச்சி இடையிலான போட்டி அதிகாலை 1:15 மணிக்கு நடக்க இருக்கிறது.
இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான ஆண்கள் ஹாக்கி போட்டி மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.
இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், அலெக்ஸ் ஆண்டனி, சர்தக் பாம்ப்ரி கலந்து கொள்ளும் 4×400 மீ ரிலே கலப்பு சுற்று 1 –மாலை 4:42 மணிக்கு நடக்க இருக்கிறது.
ஃபௌட் மிர்சா மாலை 5:30 மணிக்கு குதிரையேற்ற போட்டிகளில் கலந்து கொள்கிறார்.