டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி, திருச்சி அணியை, எளிதாக வென்றது கோவை அணி
சென்னையில் நடைபெற்றும் வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர் அணியை. 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை லைகா அணி வெற்றிப் பெற்றது.;
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
20 ஓவர் முடிவில் திருச்சி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிதிஷ் ராஜகோபால் 45 ரன்கள் எடுத்தார். கோவை தரப்பில் தன்வார், விக்னேஷ், செல்வகுமரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களம் இறங்கியது. 18.1 ஓவரில் கோவை அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 175 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக கங்கா ஸ்ரீதர் 74 ரன்களும், சாய் சுதர்சன் 57 ரன்களும் எடுத்தனர். 52 பந்துகளில் 74 ரன்கள் எடுத்த கங்கா ஸ்ரீதர் ஆட்ட நாயகானக தேர்வு செய்யப்பட்டார்.