டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது: ஓமனுக்கு 130 ரன் இலக்கு
மஸ்கட்டில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கியது. ஓமன் அணிக்கு 130 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பப்புவா நியூ கிரினியா;
ஓமனில் இருபது ஓவர் உலக கோப்பை போட்டிகள் துவங்கியது. முதல் போட்டி இன்று மதியம் மஸ்கட்டில் துவங்கியது. டாஸ் வென்ற ஓமன் அணி, முதல் பேட்டிங்கைபப்புவா நியூ கிரினியா அணிக்கு கொடுத்தது. பப்புவா நியூ கிரினியா அணி இருபது ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை குவித்தது. ஓமன் அணி 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்கோடு விளையாடி வருகிறது.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமிருந்ததாலும், 3-வது அலை வரலாம் என்ற அச்சம் எழும்பியதாலும், இந்த போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடந்த ஜூன் மாதம் மாற்றி அறிவிக்கப்பட்டது.
இதன்படி 16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. இதில் ஓமனில் 6 லீக் போட்டிகள் மட்டுமே நடக்கிறது. மற்ற அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதிக்கும் நிலையில், தொடக்கத்தில் முதல் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியது.
முதல் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகளில் 'ஏ' பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, 'பி' பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும் பிறகு, இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரு முதல் சுற்றில் தகுதி பெறும் அணிகள், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு முதல் சுற்றில் தகுதி பெறும் அணிகள் இடம்பெறுகின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு நுழையும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் வருகிற 24-ந்தேதி துபாயில் மோதுகிறது.
2007-ம் ஆண்டு டோனி தலைமையில் உலக கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த முறை விராட் கோலி தலமையிலான அணி வெற்றிப் பெற வேண்டும் என்கிற நோக்கோடு களம் இறங்குகிறது.இந்திய அணிக்கு டோனி ஆலோசகராக உள்ளார். இந்திய அணியில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், கோலி, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார், இஷான் கிஷன் ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்களையும். அது போல் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாக்குர், ஜடேஜா, அஸ்வின், வருண் சக்ரவர்த்தி என்று தரமான பந்து வீச்சாளர்களும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர.
இந்திய அணி வீரர்கள் தற்போதுதான் இதே விளையாட்டு மைதானங்களில் ஐபிஎல் போட்டியில் களம் கண்டனர். ஏற்கனவே பழக்கப்பட்ட பிட்ச் என்பதால் இது இந்திய வீரர்களுக்கு ஒரு கூடுதல் பலம், அனைவரும் டோனியின் ஆலோசனை படி ஒன்று பட்டு போராடினால் இரண்டாவது முறையாக டி20 உலக்கோப்பையை கைப்பற்றலாம் என்பது இந்திய ரசிகர்களின் ஒருமித்த கருத்து.
முதல் நாளான இன்று மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் லீக் ஆட்டத்தில் ஓமன்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன. ஓமன் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. பப்புவா நியூ கினியா அணி பேட்டிங் செய்து வருகிறது. 20 ஓவர்கள் முடிவில் பப்புவா நியூ கினியா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை எடுத்துள்ளது. ஓமன் அணி 130 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு பேட்டிங் செய்து வருகிறது.
இரவு 7.30 மணிக்கு மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேச அணி, கைல் கோட்ஸிர் தலைமையிலான ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது.