டி20 உலக கோப்பை: இலங்கை அணிக்கு 172 ரன்கள் இலக்கு

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றின் 3வது போட்டியில் இலங்கை அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பங்களாதேஷ் அணி.;

Update: 2021-10-24 12:14 GMT

டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றின் 3வது லீக் போட்டி இன்று துவங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தத. பங்களாதேஷ் அணி வீரர்கள் முகமது நயிம், லிட்டன் தாஸ் ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ் மேன்களாக களம் இறங்கினர்.

முகமது நயிம் 52 பந்துகளை சந்தித்து 62 ரன்கள் எடுத்த நிலையில் பினூரா பெர்னாண்டோவிடம் காட்டன் பால் முறையில் அவுட் ஆனார். லிட்டன் தாஸ் லஹிரு குமார வீசிய பந்தில் 16 ரன்கள் எடுத்த நிலையில் அவட் ஆனார்.

முதல் டவனில் இறங்கிய ஷகிப் அல்ஹசன் 10 ரன்கள் எடுத்த நிலையில் சாமிகா கருணாரத்ன வீசிய பந்தில் கிளின் போல்டு ஆனார்.அஃபிஃப் ஹொசைன் 7ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். முஸ்பிகுர் ரஹீம் 37 பந்துக்களை சந்தித்து 57 எடுத்த நிலையிலும், மஹ்மதுல்லா 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.


பங்களாதேஷ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. தொடர்ந்து 172 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு இலங்கை அணி விளையாடி வருகிறது.

Similar News