டி20 உலக கோப்பை : டாசை வென்றது பாகிஸ்தான், இந்தியா பேட்டிங்

டி20 உலக கோப்பை 2வது பிரிவு சூப்பர் 12 சுற்று லீக் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பத்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதல் பேட்டிங் செய்கிறது.;

Update: 2021-10-24 14:02 GMT

பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது.

இந்திய அணி

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா விளையாடிய 115 சர்வதேச டி20 போட்டிகளில் 73ல் வென்றுள் ளது. 2 போட்டிகள் சரிசமனில் முடிந்த நிலையில், 37ல் தோல்வி கண்டுள்ளது. 3 போட்டிகளில் முடிவு இல்லை. வெற்றி விகிதம் 63.5 சதவீதம் ஆகும்.

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி கடந்த 10 ஆண்டுகளில் விளையாடிய 129 சர்வதேச டி20 போட்டிகளில் 77ல் வென்றுள்ளது. 2 போட்டிகள் 'டை' ஆன நிலையில், 45ல் தோல்வியைத் தழுவியுள்ளது. 5 போட்டிகளில் முடிவு இல்லை. வெற்றி விகிதம் 59.7 சதவீதம் ஆகும்.


இந்திய அணி வீரர்கள்

விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூரிய குமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷண், ஷர்துல் தாகூர், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, ராகுல் சாஹர்.

பாகிஸ்தான் அணி வீரர்கள்.

பாபர் ஆஸம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பகார் ஸமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, இமத் வாசிம், ஷதாப் கான், ஹரிஸ் ராவுப், ஹசன் அலி, ஷாகீன் ஷா அப்ரிடி, ஹைதர் அலி.

இந்தியா பாகிஸ்தான் மோதும் ஆட்டங்கள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஒருநாள் மறறும் டி20 உலக கோப்பையில் இந்திய அணி இது வரை பாகிஸ்தானுக்கு எதிராக முழுமையான பலத்தை காட்டி விளையாடியுள்ளது. அதனால் அனைத்து உலக கோப்பை போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளது.

டி20 உலக கோப்பையில் இரு அணிகளும் 5 முறை மோதியுள்ள தில், அனைத்திலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது

இந்த வெற்றிகள் அனைத்தும் கேப்டன் தோனி தலைமையில் கிடைத்தவை. இப்போது முதல் முறையாகவீரட் ஹோலி தலைமையிலான இந்திய அணி, டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் உடன் மோதுகிறது. அனைத்து 20 வகையிலும் இந்திய அணி வலுவானதாக இருந்தாலும், பாகிஸ்தானுடன் மோதும்போது முழு திறமையையும் வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்,

இந்திய அணி முதல் பேட்டிங் செய்கிறது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் களம் இறங்கினர்.

Tags:    

Similar News