டி20 உலக கோப்பை இறுதி போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 173 ரன் இலக்கு
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் முதல் பேட்டிங் செய்த. நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது.
ஐக்கிய அமீரகத்தில் டி20 உலக கோப்பை கடந்த 17ம் தேதி தொடங்கியது. முதல் போட்டி ஓமனில் நடந்தது. இன்று நடக்கும் இறுதி போட்டி துபாயில் நடக்கிறது
7வது டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாடும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை ஒரு முறைக் கூட டி20 உலக கோப்பையை வென்றது கிடையாது.
இந்த நிலையில் இறுதி போட்டியில் டாசை ஆஸ்திரேலியா அணி வென்றது. முதல் பேட்டிங்கை நியூசிலாந்து அணி ஆடியது.
ஓப்பனிங் பேட்ஸ் மேன்களாக மார்ட்டின் குப்டில் , டேரில் மிட்செல் ஆகியோர் களம் இறங்கினர். டேரில் மிட்செல் 11 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை பறி கொடுத்தார்.
ஒன் டவுனில் கேப்டன் கேன் வில்லியம் சன் இறங்கினார் இவர் மார்ட்டின் குப்டிலுடன் இணைந்து பார்ட்னர் சீப் அமைத்து விளையாடி வந்தனர். மார்ட்டின் குப்டில் 28 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். நியூசிலாந்து அணி 10 ஓவர்களில் ரன்களை எடுக்க தடுமாறியது.
கேப்டன் கேன் வில்லியம் சன் 48 பந்துகளில் 85 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 85 ரன் எடுத்து நிலையில் அவுட்டானார். கிளென் பிலிப்ஸ் 18 ரன்களை எடுத்து அவுட்டானார்.
ஜேம்ஸ் நீஷம் 13 ரன்களை எடுத்தும், டிம் சஃபர்ட் 8 ரன்களை எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை எடுத்தது.
173 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு ஆஸ்திரேலியா அணி ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பின்ஞ் களம் இறங்கினர். 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆரோன் பின்ஞ் அவுட்டானார்.