டி-20 கிரிக்கெட்: ஐந்தாவது போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி-20 கிரிக்கெட் ஐந்தாவது போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
டி20 கிரிக்கெட் தொடரில் கடைசி போட்டியிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவை தொடர்ந்து ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி தொடர் வெற்றி பெற்றது.மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்த்த நிலையில் மூன்றாவது போட்டியில் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று இருந்ததோடு தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில் ஐந்தாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் பந்தடித்தனர். இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. அதனை தொடர்ந்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. 20 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டபோது ஆஸ்திரேலியாவால் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 4-1 என்ற புள்ளி கணக்கில் தொடரையும் வென்று உள்ளது.