"வெற்றி தான் முக்கியம், அடித்து நொறுக்கு" : ரோமன் பவெலை நெகிழ செய்த வார்னர்
'ஹே மேன் நான் இப்படியான கிரிக்கெட்டை விளையாடவில்லை. நீ எவ்வளவு கடினமாக அடிக்க முடியுமோ அடித்து நொறுக்கு';
ஐ.பி.எல் 15வது சீசனின் 50வது போட்டியில், மும்பை ப்ரோபோர்ன் மைதானத்தில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் மாேதியது.
முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்ய, டெல்லி அணி பேட்டிங்கை துவங்கியது. தாெடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மன்தீப் சிங் ரன் இல்லாமல் வெளியேற, அடுத்து வந்த மிட்செல் மார்ஷூம் 10 ரன்களில் வெளியேறினார். அதற்கடுத்து இணைந்து டேவிட் வார்னரும், ரோமன் பவெலும் சேர்ந்து ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை ஒட்டுமொத்தமாகச் சிதறடித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினா். இருவரும் அரை சதமடிக்க, 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 207 ரன்களை குவித்தது. 19வது ஓவரின் முடிவில் 92 ரன்களோடு சதத்திற்கு நெருக்கமாய் டேவிட் வார்னர் இருக்க, 20வது ஓவரை முழுக்க ரோமன் பவலே விளையாடிவிட்டார்.
இதுக்குறித்துப் பேசியுள்ள ரோமன் பவெல் "நான் இருபதாவது ஓவர் துவங்குவற்கு முன் வார்னரிடம் 'நான் சிங்கிள் அடித்துத் தருகிறேன், நீங்கள் சதத்தை அடியுங்கள்' என்றேன். அதற்கு அவர் 'ஹே மேன் நான் இப்படியான கிரிக்கெட்டை விளையாடவில்லை. நீ எவ்வளவு கடினமாக அடிக்க முடியுமோ அடித்து நொறுக்கு' என்று கூறினார்" என்று தெரிவித்துள்ளார். ஆட்ட முடிவில் ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.