திருவாரூரில் மாநில மகளிர் சதுரங்கம்: சென்னை மாணவிகள் வெற்றி

திருவாரூரில் மாநில மகளிர் சதுரங்கத்தில் சென்னை மாணவிகள், முதல் இரண்டு இடங்களை பெற்றனர்.

Update: 2022-01-07 01:30 GMT

வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்.

திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகத்தின்  வெள்ளி விழாவை கொண்டாடும் விதமாக,   50-வது தமிழ்நாடு மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி,  திருவாரூரில் ஐந்து நாட்கள் நடைபெற்றது. இதில் சென்னை, மதுரை, கோவை, நாகர்கோயில், திருவாரூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களைச் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடினர் .

இதில், 9 சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகளில் சென்னையைச் சேர்ந்த ஜே .சரண்யா மற்றும் அதே மாவட்டத்தைச் சார்ந்த பால கண்ணம்மா ஆகியோர் 8.5.புள்ளிகள் பெற்றிருந்தனர். இவர்களில், அதிக முன்னேற்ற புள்ளிகள் பெற்ற அடிப்படையில் ஜே .சரண்யா முதலிடம் பெற்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். இவர் இந்தப் போட்டிகளில் மட்டும் வெற்றிபெறுவது இது 6-வது முறையாகும்.

சென்னையைச் சேர்ந்த பால கண்ணம்மா,  இரண்டாவது பரிசு பெற்றார். மூன்றாவது பரிசினை மதுரையைச் சேர்ந்த மீனாட்சி இராஜம், நான்காவது பரிசினை சென்னையை சேர்ந்த சி.லட்சுமி பெற்றனர். மொத்த பரிசு தொகையாக ரூபாய் 75 ஆயிரம் வழங்கப்பட்டது.  போட்டிகளில் முதல் நான்கு இடம் பெற்றவர்கள், ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கு,  தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தமிழ்நாடு சதுரங்க இணைச் செயலர் ஆர். கே. பாலா குணசேகரன், மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் சாந்தகுமார், விழாக் குழு செயலர் முரளிதரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News