ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை

ஜிம்பாப்வேவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை டி20 தொடரைக் கைப்பற்றியது.;

Update: 2024-01-19 04:46 GMT

ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது.

ஜிம்பாப்வே அணி 14.1 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரியன் பென்னட் 29 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் கேப்டன் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேத்யூஸ் மற்றும் மஹீஷ் தீக்‌ஷனா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தில்ஷன் மதுஷங்கா மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குஷல் மெண்டிஸ் களமிறங்கினர். குஷல் மெண்டிஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் நிசங்காவுடன் டி சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த இணை இலங்கையை வெற்றி பெறச் செய்தது. 10.5 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது. பதும் நிசங்கா 39 ரன்களுடனும் (5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்), தனஞ்ஜெயா டி சில்வா 15 ரன்களுடனும் (2 பவுண்டரிகள்) களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வனிந்து ஹசரங்கா ஆட்டநாயகனாகவும், ஏஞ்சலோ மேத்யூஸ் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News