SRH vs MI IPL 2023 ஹைதராபாத்தை கடைந்தெடுத்த மும்பை அணி! கடைசி ஓவரில் 2 விக்கெட் எடுத்த அர்ஜூன்!

20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதராபாத் அணி.

Update: 2023-04-18 17:45 GMT

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸில் வென்றது ஹைதராபாத். டாஸ் வென்றதும் பவுலிங் தேர்வு செய்தது ஹைதராபாத் அணி. இதனால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இன்றைய போட்டியிலும் விளையாடுகிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் தனது திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினார்கள். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடத் துவங்கினார் ரோஹித் சர்மா.

3 ஓவர்கள் முடிவில் 28 ரன்கள் எடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ரோஹித் 19 ரன்களுடனும், இஷான் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அடுத்ததாக 4 வது ஓவரை வீசினார் ஜான்சென். அந்த ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. 

5 வது ஓவரைத் தமிழக வீரர் நடராஜன் வீசினார். அருமையாக வீசிய அவர் அந்த ஓவரில் ரோஹித் சர்மா விக்கெட்டை எடுத்தார். 6 வது ஓவரை வீசிய புவனேஷ்குமார் 11 ரன்களை விட்டுக் கொடுத்தார். பவர்ப்ளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது மும்பை அணி. 

 அதன் பிறகு 11 ஓவர்கள் வரை விக்கெட் இழக்காமல் ஆடிய மும்பை அணிக்கு, 12 வது ஓவரின் முதல் பந்தில் இஷான் கிஷனும், 5 வது பந்தில் சூர்யகுமாரும் அவுட் ஆகி வெளியேறினர். அவருக்கு பிறகு திலக் வர்மா களமிறங்கினார். 

திலக் வர்மா, கேமரூன் கிரீன் இருவரும் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளித்து ஆடினர். 17 வது ஓவரில் திலக் வர்மா அவுட் ஆக, டிம் டேவிட் களமிறங்கினார். ஆட்ட நேர இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 39 பந்துகளில் 63 ரன்களுடன் கேமரூன் கிரீன் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். 16 ரன்களுடன் டிம் டேவிட் கடைசி பந்தில் அவுட் ஆனார்.   மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை எடுத்திருந்தது.

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஹைதராபாத் அணி. அந்த அணியின் துவக்க வீரர்களான ஹாரி ப்ரூக், மயாங்க் அகர்வால் இருவரும் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ப்ரூக் 9 ரன்களுடனும் திரிப்பாதி 7 ரன்களுடனும் நடையைக் கட்டினர். 9 வது ஓவரில் 22 ரன்கள் எடுத்திருந்த மார்க்ரம், கேமரூன் கிரீன் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த அபிஷேக் 1 ரன்னில் அவுட் ஆக, அடுத்து களமிறங்கினார் கிளாஸ்ஸன். 

கிளாஸ்ஸன், மயாங்க் இருவரும் சற்று நேரம் நிலைத்து நின்று ஆடி ரன்களை குவித்தனர். கிளாஸ்ஸன் 36 ரன்களிலும், மயாங்க் 48 ரன்களிலும் அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் அப்துல் சமாத், புவனேஷ்வர்குமார் இருவரும் போராடினர். கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அந்த ஓவரை சச்சினின் மகன் அர்ஜூன் வீசினார். 

முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. இரண்டாவது பந்தை வேகமாக அடித்த அப்துல் சமத் ரன் அவுட் ஆனார். மூன்றாவது பந்தில் 2 ரன்கள் எடுத்தனர். கடைசி 3 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 4 வது பந்தை வீசினார் அர்ஜூன். அந்த பந்தில் 1 ரன்னே எடுத்தனர். 5 வது பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் புவனேஷ்வர்குமார். இதன்மூலம் ஹைதரபாத் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆடுகளம் Pitch report

Venue: Rajiv Gandhi International Stadium, Hyderabad

இடம்: ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கம், ஹைதராபாத்

Date & Time: Tuesday, April 18, 7:30 PM IST

தேதி & நேரம்: செவ்வாய், ஏப்ரல் 18, மாலை 7:30 IST

Telecast & Streaming Details: Star Sports Network and JioCinema

டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா

அதிக ரன்கள் குவிக்கும் மைதானமாக இந்த ஆடுகளம் அமையும். அதே நேரம் இரண்டாவது பேட்டிங் ஆடி ஸ்கோரை சேசிங் செய்ய டாஸ் வெல்லும் அணி முடிவு செய்யும் என்று கணிக்கப்படுகிறது.

Sunrisers Hyderabad (SRH):

Harry Brook, Mayank Agarwal, Rahul Tripathi, Aiden Markram (c), Abhishek Sharma, Heinrich Klaasen (wk), Marco Jansen, Bhuvneshwar Kumar, Mayank Markande, Umran Malik, T Natarajan

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH):

ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேட்ச்), அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென் (வி.கே), மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன்

Mumbai Indians (MI):

Ishan Kishan (wk), Rohit Sharma, Suryakumar Yadav (c), Cameron Green, Tilak Varma, Tim David, Nehal Wadhera, Hrithik Shokeen, Piyush Chawla, Duan Jansen, Riley Meredith

மும்பை இந்தியன்ஸ் (MI):

இஷான் கிஷன் (WK), ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் (கேட்ச்), கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, துவான் ஜான்சன், ரிலே மெரிடித்

Tags:    

Similar News