தமிழக வீரரை துருப்புச் சீட்டாக பயன்படுத்தப்போகும் SRH! உஷாரான CSK!
தமிழக வீரரை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களை விரைவில் அவுட் ஆக்கும் உத்தியைக் கையிலெடுக்க சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முயற்சித்துக் கொண்டிருக்கு, யூடர்ன் போட்டு எஸ்கேப் ஆக முயற்சித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.;
தமிழக வீரரை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களை விரைவில் அவுட் ஆக்கும் உத்தியைக் கையிலெடுக்க சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முயற்சித்துக் கொண்டிருக்கு, யூடர்ன் போட்டு எஸ்கேப் ஆக முயற்சித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஐபிஎல் 2023 சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரின் 29வது போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ள இருக்கிறது. இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுக்கும் என்று கணிக்கப்படுகிறது. முதலில் பெரிய ஸ்கோரை செட் செய்து வைத்துவிட்டு சுழலில் சுருட்டி விட வாய்ப்பாக அமையும் என்பது கணிப்பு. அதே நேரம் துவக்க ஆட்டக்காரர்களாக ருத்துராஜ் மற்றும் கான்வே இருவரும் ஸ்பின் பவுலிங்கை விரட்டி விரட்டி அடிப்பார்கள்.
ருத்துராஜூக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகள் அதிக தொல்லையைத் தந்துள்ளது. இதனால் தமிழக வீரர் நடராஜன் மற்றும் மார்க்கோ யான்சன் ஆகியோரை வைத்து முதல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்ற ஹைதராபாத் திட்டமிட்டுள்ளது. ருத்துராஜ், கான்வே, ரஹானே ஆகிய மூவரையுமே அவுட் ஆக்கும் உத்தியை இவர்கள் பயிற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் முக்கியமாக ருத்துராஜ் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சமீப காலமாக அதிகமாக திணறி வருகிறார் என்பதை கண்டறிந்து அதற்கான பயிற்சியை எடுத்து வருகிறார்கள்.
இதனை சென்னை அணி நிர்வாகமும் கண்டறிந்திருக்கிறது. ஹைதராபாத் அணி தமிழக வீரரை டிரம்ப் கார்டாக பயன்படுத்த வாய்ப்பிருப்பதால், வலைப்பயிற்சியில் ருத்துராஜுக்கு சிறப்பு பயிற்சி எடுக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இடது கை வேகப்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்பதை பயிற்சி செய்து வருகிறாராம் ருத்துராஜ். இதனால் நடராஜனை வைத்து ருத்துராஜை வீழ்த்தும் ஹைதராபாத் அணியின் திட்டம் பலிக்குமா இல்லை சென்னை அணி அதை முறியடிக்குமா என்பதை இன்றைய ஆட்டத்தில் தெரிந்து கொள்வோம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 13 முறையும் ஹைதராபாத் அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு ஒரே ஒரு வெற்றிதான் கிடைத்துள்ளது. இதனால் இந்த முறை சென்னை அணியை வெல்ல முனைப்போடு களம் காண்கிறது SRH.