ஹைதராபாத் அணி வெற்றி! 9 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது!

20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணியால் 188 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.;

Update: 2023-04-29 17:41 GMT

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனால் டெல்லி அணி ஃபீல்டிங் செய்ய களமிறங்கியது. துவக்க வீரர்களாக ஹைதராபாத்தின் அபிஷேக் சர்மா, மயாங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். இஷாந்த் சர்மா ஓவரில் மயாங்க் அகர்வால் 5 ரன்களிலேயே அவுட் ஆகி ஏமாற்றினார்.

அவரைத் தொடர்ந்து அபிஷேக் ஜோடியாக ராகுல் திரிபாதி களமிறங்கினார். ஆனாலும் அவர் பெரிய ஆட்டம் எதுவும் ஆடாமல் அப்படியே கிளம்பினார். மார்க்ரமும் இதே நிலையில் அவுட் ஆகி கிளம்பி ஏமாற்றம் செய்தார். அடுத்து ஹாரி ப்ரூக் டக் அவுட் ஆகி வெளியேறினார். அபிஷேக் சர்மா மட்டும் தனித்து நின்று ஆடி 36 பந்துகளில் 67 ரன்களை அடித்தார்.

ஹென்ரிச் க்ளாஸன் 27 பந்துகளில் 53 ரன்களும், அப்துல் சமத் 21 பந்துகளில் 28 ரன்களும், அகில் ஹுசைன் 16 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி மொத்தம் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்தது.

டெல்லி அணி தரப்பில் மிட்சல் மார்ஷ் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இஷாந்த் சர்மா, அக்ஷார் படேல் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் டக் அவுட் ஆனார். அவருடன் களமிறங்கிய பில் சால்ட் நிலைத்து நின்று ஆடினார். மிட்சல் மார்ஷ் 39 பந்துகளில் 63 ரன்களும் எடுத்தனர். மணிஷ் பாண்டே 1 ரன்னும், பிரியம் கார்க் 12 ரன்களும் எடுத்து அவுட் ஆன நிலையில், சர்பாஸ் கானுடன் அக்ஷார் படேல் ஜோடி சேர்ந்தார்.

16 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் எடுத்திருந்த டெல்லி அணி கையில் 5 விக்கெட்டுகளும் இருந்தது. 24 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு அக்ஷார் படேலும் சர்பாஸ் கானும் போராடி வருகின்றனர். சர்பாஸ் கானும் அவுட் ஆகி வெளியேற, கடைசியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது டெல்லி.

Tags:    

Similar News