தடகள போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி

திருச்சியில் நடந்த தடகள போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.;

Update: 2024-08-11 13:30 GMT

சாம்பியன் பட்டம் பெற்ற அணி வீரர்களுடன் தடகள சங்க நிர்வாகிகள்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட தடகள சங்கம், ஸ்டேட் பேங்க் (லேட்) மோகன் நினைவு சுழற்கோப்பை 2024க்கான இந்த போட்டியை நியூரோ ஒன் & பனானா லீப் & அற்புத பவன்  இணைந்து நடத்தினார்கள்.

போட்டிகள் 09/08/2024, 10.08.24 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடந்தது. திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில் நடந்தது. போட்டியில் பங்கேற்க வந்தவர்களை திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் ச. ரவிசங்கர் வரவேற்றார்.

திருச்சி மாவட்ட தடகள சங்க துணை செயலாளர்கள் எம்.கனகராஜ், எம்.சுந்தரேசன், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பாபு, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பனானா லீப் நிறுவனர் ஆர்.மனோகரன் பரிசு, சான்றிதழ், நினைவு பரிசுகள் வழங்கினார்.

ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணியும், 2,வது இடம் கோல்டன் ஸ்போர்ட்ஸ் கிளப்பும் பெற்றன.

பெண்கள் பிரிவில் ஓட்டு மொத்த சாம்பியன் முசிறி அமலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், 2வது இடம் திருச்சி பாந்தர் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆகிய அணிகள் பெற்றார்கள் .

இப்போட்டியில் ரவிந்தன், மனோகரன், கண்ணன், மதி, லாசர், ஹரிஹர ராமச்சந்திரன் உள்பட 2000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பலர் கலந்து  கொண்டு சிறப்பித்தார்கள் .

முடிவில் தடகள சங்க நிர்வாகி துரை வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News