இதெல்லாம் ரொம்ப ஓவருங்க.. 2 கேலரியை முழுசா பிளாக் பண்ணிய மும்பை டீம்!
மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதன்படி, மும்பை இந்தியன்ஸ் ஃபேன் ஷோன் என இரண்டு கேலரிகளை ஒதுக்கியிருக்கிறார்கள்.;
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தில் அதிக மஞ்சள் சட்டையணிந்த ரசிகர்கள் வந்து குவிந்து முழுக்க முழுக்க மஞ்சள் நிறமாக காட்சியளிக்கிறது என்பதால் 2 கேலரிகளை முழுவதுமாக பிளாக் செய்திருக்கிறார்கள் மும்பை அணி.
ஐபிஎல் தொடரில் எப்போதும் இந்த இரு அணிகள் மோதினால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகமடைந்து விடுவார்கள். அந்த வகையில் இந்த வருடத்துக்கான முதல் ஆட்டம் நாளை சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.
தோனிக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். இந்தியா முழுக்க ரசிகர்கள் தோனிக்கு இருக்கிறார்கள். தோனி விளையாடும் போது ஒரு எனர்ஜி மைதானத்தில் இருக்கும். அதனைக் காணவே ரசிகர்கள் மைதானத்துக்கு படையெடுப்பார்கள். சிஎஸ்கே ரசிகர்களின் கூட்டமும் இதனால்தான் அதிகரிக்கிறது. மும்பை வான்கடே முழுவதும் கடந்த ஆண்டு போட்டியின்போது முழுக்க முழுக்க மஞ்சள் நிற ஜெர்ஸிக்களாக காட்சியளித்ததாம். இதனால் கடுப்பான மும்பை அணி நிர்வாகம், இம்முறை அவர்களுக்கு சாதகமாக ஒரு முடிவை எடுத்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதன்படி, மும்பை இந்தியன்ஸ் ஃபேன் ஷோன் என இரண்டு கேலரிகளை ஒதுக்கியிருக்கிறார்கள். இந்த பகுதியில் மற்ற அணி ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்கிறார்கள்.
இந்த பகுதியில் இருப்பவர்கள் மும்பை ஜெர்ஸியை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்றும் வேறு எந்த அணியின் ஜெர்ஸியையும் அணியக் கூடாது என்று கூறியிருக்கிறார்களாம். கூட்டம் சேரலன்னு இப்படி கூட்டத்த சேத்துக்குறாங்க என சமூக வலைத்தளங்களில் கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.