ருத்துராஜூக்கு கல்யாணம்! பொண்ணு யாருன்னு தெரியுமா? அட இவங்களுமா?

தம்பதி தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.;

Update: 2023-06-04 08:34 GMT

ருத்துராஜ் கெய்க்வாட் தனது காதலியை கரம்பிடித்துள்ளார். அவரும் கிரிக்கெட்டர் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் அதிரடி பேட்ஸ்மன் ருத்துராஜ் கெய்க்வாட் தனது நீண்ட நாள் காதலியான உட்கர்ஷா பவார் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணத்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தம்பதி தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மனும் அதிரடி ஆட்டக்காரருமான ருத்துராஜ் கெய்க்வாட், மும்பை அணியில் விளையாடி வரும் உட்கர்ஷா என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார். இந்த விசயம் இந்த ஐபிஎல் போட்டியின்போது ரசிகர்களுக்கு தெரியவந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் 590 ரன்கள் குவித்திருந்தார் ருத்துராஜ். அநேகமாக அனைத்து போட்டிகளிலும் இவரது ஆட்டத்தைக் காண உட்கர்ஷா வந்திருந்தார். மேலும் இருவரும் சேர்ந்து தோனியிடம் வாழ்த்து பெற்றிருந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தன.

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சூப்பராக விளையாடி வரும் ருத்துராஜை விரைவில் இந்திய அணியில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள். இவரது அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கும் என்றும் கூறுகிறார்கள். ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இந்திய அணியில் இவர் ஓபனருக்கான மாற்று வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் திடீரென இவர் விலகியிருந்ததால், அந்த வாய்ப்பு யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்டது.


இந்நிலையில்தான் ருத்துராஜுக்கு திருமணம் என்கிற செய்தி வெளியில் கசிந்தது. மகராஷ்டிராவைச் சேர்ந்த உட்கர்ஷா பவாருக்கும் ருத்துராஜுக்கும் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களது திருமணத்துக்காக முன்னரே தோனியைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News