சென்னைக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய ரோஹித் சர்மா! இன்னிக்கு என்ன ஆக போகுதோ?

இருந்தபோதிலும் ஆறுதலான விசயம் என்னவென்றால் கடந்த 4 முறை அவர் 20 ரன்களைக் கூட தாண்ட வில்லை என்பதுதான். ஆனால் இந்த முறை அவர் அப்படி இருக்கமாட்டார் என்கிறார்கள்.

Update: 2023-04-08 13:22 GMT

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு துவங்க இருக்கிறது.

சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இது கடைசி தொடராக இருக்கலாம். மும்பை அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை சென்னை அணிக்கு எதிராக அதிக முறை வென்றிருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக அதன் கேப்டன் ரோஹித் சர்மா இருக்கிறார். மற்ற அணிகளுக்கு எதிராக எப்படி ஆடினாலும் ரோஹித் சர்மா சென்னை அணிக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடுவார். இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் அவர் எப்படி ஆடப் போகிறார் என்பதைக் காண கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே மொத்தம் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா அதில் 3 முறை அரைசதம் அடித்திருக்கிறார். இருந்தபோதிலும் ஆறுதலான விசயம் என்னவென்றால் கடந்த 4 முறை அவர் 20 ரன்களைக் கூட தாண்ட வில்லை என்பதுதான். ஆனால் இந்த முறை அவர் அப்படி இருக்கமாட்டார் என்கிறார்கள்.

சென்னைக்கு எதிராக ரோஹித் சர்மா ஆடிய ஒரு ஆட்டத்தில் 48 பந்துகளைச் சந்தித்து அவர் 87 ரன்கள் குவித்திருந்தார். மற்றொரு ஆட்டத்தில் 46 பந்துகளில் 60 ரன்களை எடுத்திருந்தார்.

இதைத் தவிர 30 பந்துகளில் 39 ரன்கள், 31 பந்துகளில் 50 ரன்கள் என அதிரடியாக விளையாடியிருக்கிறார். எனினும் சமீபத்தில் சென்னை அணிக்கு எதிராக அவரது ரன்கள் 20க்கும் குறைவானதாகவே இருக்கிறது.

மொத்தமாக 40 ரன்கள் சராசரியாக வைத்திருக்கிறார். 9 ஆட்டங்களில் ஆடி 320 ரன்கள் அடித்துள்ளார் ரோஹித் சர்மா. இம்முறை அவரது அணியின் சொந்த மண்ணான மும்பை வான்கடேவில் விளையாடுவதால் நிச்சயம் பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது. 

Tags:    

Similar News