அதிரடியாக விளையாடி பெங்களூரைத் தோற்கடித்த டெல்லி அணி
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அந்த அணியின் துவக்க வீரர்களாக விராட் கோலி, பாஃப் டூப்ளஸிஸ் ஆகியோர் களமிறங்கினர்.;
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அந்த அணியின் துவக்க வீரர்களாக விராட் கோலி, பாஃப் டூப்ளஸிஸ் ஆகியோர் களமிறங்கினர்.
டெல்லி அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் அடித்து நொறுக்கினர். இருவரும் தலா 5 பவுண்டரிகளை அடித்து பெங்களூரு அணிக்கு மிகச் சிறந்த துவக்கத்தைத் தந்தனர். நன்றாக விளையாடிக்கொண்டிருந்த டூப்ளஸிஸ் 32 பந்துகளில் 45 ரன்களை எடுத்திருந்தபோது மார்ஷ் பந்துவீச்சில் அக்ஷார் படேலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த க்ளென் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார்.
லாம்ப்ரோர் அடுத்து களமிறங்கினார். அவரும் தன் பங்குக்கு பந்துகளை அடித்து ஆட, 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் நின்றார்.
விராட் கோலி 46 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பில் சால்ட் தனது அதிரடியான ஆட்டத்தால் மிகப்பெரிய ஸ்கோரை எட்டச் செய்தார். அவருக்கு துணையாக மிட்சல் மார்ஷ் 26 ரன்களும், ரஸ்ஸவ் 22 பந்துகளில் 35 ரன்களும் எடுத்திருந்தனர். கடைசி பந்தை சிக்ஸருக்கு அனுப்பி டெல்லி அணிக்கு வெற்றி தேடி தந்தார் ரஸ்ஸவ்.
இதன் மூலம் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.