ஆர்சிபி அணி 68 ரன்களில் சுருண்டது ஏன்? ஆர்சிபி கேப்டன் சொன்ன காரணம்

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஏன் என்பது குறித்து கேப்டன் டுபிளஸிஸ் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-04-24 02:20 GMT

ஆர்சிபி அணி கேப்டன் டுபிளஸிஸ் சிஎஸ்கேவில் எப்படி இருந்த மனுசன், இங்க வந்து கஷ்டப்படுகிறாரே என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 2 முறை கோல்டன் டக்காகி வெளியேறி இருப்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே தோல்வி குறித்து பேசிய கேப்டன் டுபிளஸிஸ், எங்களுடைய பேட்டிங்கின் முதல் 4 ஓவரில் தான் தவறு நிகழ்ந்துவிட்டது. விரைவில் 4 விக்கெட்டுகளை இழந்தால் கொஞ்சம் தடுமாறினோம். ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. பந்து நன்றாக ஸ்விங் ஆனது. நாங்கள் விளையாடியதில் சிறந்த விக்கெட் இது தான்.


பந்து ஸ்விங் ஆகும் போது நாம் கொஞ்சம் ரன்களை தியாகம் செய்திருக்க வேண்டும். விக்கெட் விழாமல் களத்தில் நின்று பின்னர் அடித்து ஆடியிருக்க வேண்டும். இந்த தவறை தான் நாங்கள் செய்துவிட்டோம். ஆனால் இதை சாக்கு போக்காக சொல்ல விரும்பவில்லை. யான்சென் சிறப்பாக பந்துவீசினார். இது என்றாவது வேலையில் அமையும் ஒரு மோசமான நாள் தான்.

இதனால் மனமுடைந்து, இதை பற்றியே நினைத்து கொண்டு இருக்காமல் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். இது ஒரு நீண்ட தொடர். இதனால் இன்றைய ஆட்டத்தில் செய்த தவறிலிருந்து பாடத்தை கற்று கொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும். இந்த தருணத்திலேயே சிக்கி கொள்ளாமல் ஒரு அணியாக முன்னேறுவோம் என்று கூறினார்.

ஆர்சிபி செய்த தவறு குறித்து தெளிவாக கேப்டன் டுபிளஸிஸ் கூறினார். டி20 போட்டியை பொறுத்தவரை, அனைத்து போட்டியிலும் பெரிய ரன்களை விளாச வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால், பந்துவீச்சாளர்களுக்கு மரியாதை அளித்து பொறுமை காக்க வேண்டும். பின்னர், பந்து ஸ்விங் ஆனது நின்றால் பின்னர் அதிரடியை காட்ட வேண்டும். முன்வரிசை வீரர்கள் ஆட்டமிழந்தால், பின்வரிசை வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கௌரவமான இலக்கை தான் எட்ட நினைக்க வேண்டும். இதில் தான் ஆர்சிபி கோட்டைவிட்டது.

Tags:    

Similar News