சிஎஸ்கேவில் ரவி அஸ்வின்..! பொறுப்பைத் தூக்கி கொடுத்த நிர்வாகம்..!

பதவிதான் அஸ்வினைத் தேடி வந்துள்ளது. முடிவு செய்யும் பொறுப்பை அஸ்வினுக்கு அளித்து இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்.

Update: 2024-06-05 03:45 GMT

இந்திய கிரிக்கெட் ரசிகர்களே ஆச்சர்யப்படும் வகையில் சிஎஸ்கே அணி நிர்வாகம், ரவிச்சந்திரன் அஸ்வினை அழைத்து வந்து பொறுப்பு கொடுத்துள்ளது. இது எதிர்பாராத டிவிஸ்ட்டாக இருக்கிறது. விரைவில் அதகளம் தொடங்கும் என சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அஸ்வின் ஏற்கனவே சில ஆண்டுகள் சிஎஸ்கே அணியில் விளையாடியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்று ஆடி வந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது சிஎஸ்கே அணியில் முக்கியப் பொறுப்பு ஒன்றை ஏற்று இருக்கிறார். இப்போது ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கும். அதெப்படி எந்த ஏலமும் இல்லாமல் அஸ்வின் சிஎஸ்கேவுக்கு வந்துள்ளார் என்பதுதான் அந்த சந்தேகம். அவருக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் புதிய பொறுப்பையும் வழங்கியுள்ளது.

ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணி என்று பெயர் பெற்றுள்ள சிஎஸ்கே அணியில் விளையாட அனைத்து வீரர்களுமே விரும்புவார்கள். அவர்களது பயிற்சியும் மூத்த வீரர் தோனியின் அனுபவ அறிவுரைகளையும் மற்ற அணி வீரர்கள் மிகுந்து கவனிக்கிறார்கள். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை புறநகரில் செயல்திறன் மையம் ஒன்றை திறக்க இருக்கிறது. அதன் தலைமைப் பொறுப்பை ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கியுள்ளது. அங்குதான் இனிமேல் சிஎஸ்கே அணி வீரர்கள் பயிற்சி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த மையத்தின் தலைமைப் பதவிதான் அஸ்வினைத் தேடி வந்துள்ளது. அங்கு பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவது, என்ன மாதிரியான பயிற்சிகள் அளிக்க வேண்டும் என முடிவு செய்யும் பொறுப்பை அஸ்வினுக்கு அளித்து இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்.

இதையடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தின்போது நிச்சயமாக சிஎஸ்கே அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், அஸ்வினை ஏலத்தில் எடுப்பது என்பது நம் கையில் இல்லாதது. அது நமது கட்டுப்பாட்டில் வராது. ஏலத்தின் போக்கு, எப்படி செல்கிறது என்பதை பொறுத்தே அது மாறும்.

என்ன வாய்ப்பு இருக்கிறதோ அதனை நாம் பார்க்கலாம். அதேநேரம் இப்போது அவரை உயர் செயல்திறன் மையத்தில் பொறுப்பேற்கிறார். அதன் அனைத்து செயல்பாடுகளையும் அஸ்வின் கவனிப்பார். அவரை நாங்கள் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அவர் இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு பகுதி. டிஎன்சிஏ முதல் டிவிசன் அணிக்காக அவர் விளையாடுவார் என்று தெரிவித்தார்.

அஸ்வின் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் ஆடத் துவங்கிய காலத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் அணிக்காக ஆடி வந்தார். அதன்பின்னரே அவர் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றார். 2016ம் ஆண்டு அவர் இந்தியா சிமெண்ட் நிறுவனத்திலிருந்து விலகி அதன் போட்டி நிறுவனமான கெம்ப்லாஸ்ட்டில் இணைந்தார்.

பின்னர் 2018ல் அங்கிருந்து மாறி டேக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தில் சேர்ந்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் இடம்பெற்று ஆடி வந்தார். இந்த நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமை நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு வந்துள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News