RR Vs PBKS சஞ்சு சாம்சனை வெல்வாரா தவான்! இன்று மோதல்!

Rajasthan Royals vs Punjab Kings ஆளுக்கொரு வெற்றி...! இந்த போட்டியில் வெல்லப்போவது யார்?;

Update: 2023-04-05 12:43 GMT

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மார்ச் 31ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 6 வது நாளான இன்று நடைபெறவுள்ள 8வது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி. இந்த போட்டி அசாமிலுள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

இதுவரை நடந்த ஆட்டங்களில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் ஆளுக்கொரு வெற்றியை பெற்றிருக்கின்றன. முதல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை எதிர் கொண்டு வென்றது ராஜஸ்தான். ஐபிஎல் 2023ன் முதல் 200 ரன்களை அடித்தது ராஜஸ்தான் அணிதான். 203 ரன்களை அடுத்து ஹைதராபாத்துக்கு 204 ரன்கள் இலக்காக தந்தது ராஜஸ்தான். ஆனால் அவர்களால் அந்த ஸ்கோரை எட்ட முடியவில்லை.

அதேநேரம் பஞ்சாப் அணி கொல்கத்தாவை வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் 191 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணி, கொல்கத்தாவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

ஆடுகளம்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருக்கும் பார்ஸ்பரா ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. முதல்முறையாக அங்கு நடைபெறும் ஐபிஎல் போட்டி இதுவாகும்.

சிறந்த வீரர்கள்

ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யாஷஷ்வி ஜெய்ஸ்வால், யஷ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட் ஆகியோர் நல்ல பாஃர்மில் இருக்கிறார்கள்.

பஞ்சாப் அணியில் ஷிகர்தவான், பானுகா ராஜபக்ஷே, அர்ஷ்தீப் சிங், சாம் குரன், ரபாடா உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

rr vs pbks dream11 prediction

  1. சஞ்சு சாம்சன்,
  2. ஜோஸ் பட்லர்,
  3. யாஷஷ்வி ஜெய்ஸ்வால்,
  4. ஷிகர்தவான்,
  5. தேவ்தத் படிக்கல்
  6. பானுகா ராஜபக்ஷே,
  7. அர்ஷ்தீப் சிங்,
  8. சாம் குரன்,
  9. ரபாடா
  10. யஷ்வேந்திர சாஹல்,
  11. டிரெண்ட் போல்ட்

விளையாடும் வீரர்கள்

Rajasthan Royals

Shimron Hetmyer, Yashasvi Jaiswal, Devdutt Padikkal, R Parag, KR Sen, Ravichandran Ashwin, Jason Holder, SV Samson(C), Jos Buttler, Trent Boult, Yuzvendra Chahal

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ஆர் பராக், கேஆர் சென், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், எஸ்வி சாம்சன்(சி), ஜோஸ் பட்லர், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல்

Punjab Kings

Shikhar Dhawan(C), Shahrukh Khan, B Rajapaksa, Sikandar Raza, SM Curran, P Simran Singh, JM Sharma(wk), Harpreet Brar, K Rabada, RD Chahar, Arshdeep Singh

பஞ்சாப் கிங்ஸ்

ஷிகர் தவான்(சி), ஷாருக் கான், பி ராஜபக்சே, சிக்கந்தர் ராசா, எஸ்எம் குர்ரான், பி சிம்ரன் சிங், ஜேஎம் சர்மா(வாரம்), ஹர்ப்ரீத் ப்ரார், கே ரபாடா, ஆர்டி சாஹர், அர்ஷ்தீப் சிங்

Tags:    

Similar News