IND vs SA ODI: மூன்றாவது மற்றும் கடைசி போட்டிக்கு மழை அச்சுறுத்தல்

Latest Sports News in Tamil -புதுதில்லியில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் தொடரை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி மழை காரணமாக கைவிடப்படலாம்

Update: 2022-10-11 04:34 GMT

Latest Sports News in Tamil -இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை 20 ஒரு நாள் போட்டிகளில் ஆடி, 12-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்திற்கு முடிவில்லை.

தென்ஆப்பிரிக்கா இங்கு விளையாடிய ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது.

ராஞ்சியில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 279 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி துரத்தி வெற்றி பெற்றதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை சமன் செய்தது. புதுதில்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற விரும்புகிறது. மேலும், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் இருப்பதால், இந்த போட்டியை வெல்லும் அணி தொடரை கைப்பற்றும், எனவே இன்றைய ஆட்டம் மிக விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ராஞ்சியில் வெற்றிக்குப் பிறகு இந்தியா தனது பிளேயிங் லெவனை மாற்றுவது சாத்தியமில்லை. முதல் ஒருநாள் போட்டியில் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியதை விட ராஞ்சியில் இந்தியாவின் ஆறு பேர் கொண்ட தாக்குதல் மிகவும் சிறப்பாக இருந்தது. ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷாபாஸ் அகமது ஆகிய மூன்று ஆல்-ரவுண்டர்களுடன் விளையாடுவது இந்திய பேட்டிங்கிற்கு வலு சேர்க்கும்.

புதுடெல்லியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் இருப்பதால், தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜார்ன் ஃபோர்டுயினுக்கு பதிலாக லுங்கி நிகிடியை பரிசீலிக்கலாம். தப்ரைஸ் ஷம்சி உடல்தகுதியுடன் இருந்தாலும் திரும்ப வர வாய்ப்பில்லை. தென்னாப்பிரிக்கா நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மஹாராஜுடன் களமிறங்கலாம். மேலும் ஆறாவது பந்துவீச்சாளராக எய்டன் மார்க்ராம் சேர்க்கப்படலாம்

இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. திங்கள்கிழமை முதல் டெல்லியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் மழைப்பொழிவுக்கான வாய்ப்பு 40% உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

மேலும், 3 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியின் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 2019 மார்ச்சில் கடைசி ஆட்டம் இங்கு நடைபெற்றது. மைதானத்தில் நடந்த கடைசி மூன்று போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றது. புதுதில்லி மைதானத்தின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 259 ஆகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News