பிரெஞ்சு ஓபன் : அரையிறுதிக்கு முன்னேறினார் ரபேல் நடால்

French Open Tennis 2022: பிரெஞ்சு ஓபன் காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரபேல் நடால்;

Update: 2022-06-01 03:43 GMT

French Open Tennis 2022: பாரிஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த காலிறுதி ஆட்டத்தில் ரபெல் நடாலும் (ஸ்பெயின்) , நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), மோதினர் .

டென்னிஸ் உலகின் இரு நட்சத்திரங்கள் விளையாடுவதால் ரசிகர்களிடையே இந்த போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இருவரும் சம பலத்துடன் விளையாடினர் . விறுவிறுப்பான நடைபெற்ற ஆட்டத்தில் 6-2, 4-6, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் .

Tags:    

Similar News