பிரபல கால்பந்து வீரர் பீலே உடல்நிலை கவலைக்கிடம்

பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது;

Update: 2022-12-27 03:25 GMT

மருத்துவமனையில் கெலி நாசிமெண்டோ தனது தந்தை பீலேவை கட்டிப்பிடித்துள்ளார்

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் புற்றுநோய் கண்டறியப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். புற்றுநோய் அதிகரித்து உடலின் சில பாகங்களுக்கு பரவியுள்ளது. மேலும், நுரையீரல், இயத செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பீலேவை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

தகவல்களின்படி, முன்னாள் கால்பந்து வீரருக்கு கோவிட்-19 இருந்தது, இருப்பினும் 'அனைத்து அளவுகளிலும்' தடுப்பூசி போடப்பட்டது. கீமோதெரபி அவரை மிகவும் மோசமாக மாற்றியதால், அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் பீலேவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிகிறது. இதனிடையே பீலே குணமடைய உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு உள்ளனர்.

வரலாற்றில் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படும் பீலே என்றும் அழைக்கப்படும் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ, நான்கு உலகக் கோப்பைகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்றார் - 1958, 1962, 1970. அவர் 14 ஆட்டங்களில் 12 கோல்களையும் அடித்தார்.

அவரது தொழில் வாழ்க்கையில், பீலே 1,363 ஆட்டங்களில் 1,281 கோல்களை அடித்தார்.

Tags:    

Similar News