PBKS vs MI மும்பை அணி வெற்றி! பஞ்சாபை பதற வைத்தது!
கடைசி நேரத்தில் டிம் டேவிட், திலக் வர்மா இருவரும் களத்தில் நின்றனர். 12 பந்துகளில் 12 ரன்கள் தேவை எனும்போது 19வது ஓவரின் முதல் பந்தையே பவுண்டரிக்கு தெறிக்கவிட்டார் டிம் டேவிட். 20 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.;
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனால் பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், பிரம்சிம்ரன் சிங் இருவரும் களமிறங்கினர்.
இதில் பிரப்சிம்ரன் 9 ரன்களுக்கு அவுட் ஆக, ஷிகர்தவானுடன் மேட் ஷார்ட் சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும் அவ்வப்போது அதிரடி காட்டியும் விளையாண்டனர். 20 பந்துகளைச் சந்தித்திருந்த ஷிகர் தவான் 30 ரன்களில் அவுட் ஆக, லியாம் லிவிங்ஸ்டன் களமிறங்கினார். அவர் மும்பை பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். அடுத்து மேட் ஷார்ட் அவுட் ஆனார்.
அவர் 26 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தார். லியாம் லிவிங்ஸ்டனுடன் ஜிதேஷ் ஷர்மா களமிறங்கியது அதிரடியாக உயர்ந்தது பஞ்சாப் அணியின் ஸ்கோர். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 214 ரன்கள் எடுத்தது. அந்த அணி மொத்தம் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.
மும்பை அணி தரப்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய ஓவர்களை வெளுத்து வாங்கினர் பஞ்சாப் வீரர்கள்
215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி துவக்க வீரர்கள் களமிறங்கினர். ரோஹித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேற இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார் கேமரூன் க்ரீன்.
கேமரூன் 18 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் அவர் 4 பவுண்டரிகளை விளாசியிருந்தார். அடுத்து சூர்ய குமார் களமிறங்கினார், இஷானுடன் சேர்ந்து அடி வெளுக்க மும்பை அணியின் ஸ்கோர் மள மளவென உயர்ந்தது.
கடைசி நேரத்தில் டிம் டேவிட், திலக் வர்மா இருவரும் களத்தில் நின்றனர். 12 பந்துகளில் 12 ரன்கள் தேவை எனும்போது 19வது ஓவரின் முதல் பந்தையே பவுண்டரிக்கு தெறிக்கவிட்டார் டிம் டேவிட். 20 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.