ஒலிம்பிக் போட்டி, குத்து சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினாவுக்கு வெண்கலம்
ஒலிம்பிக் குத்துசண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியா 3 வது பதக்கத்தை பெற்றது.;
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச் சண்டை அரையிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் தோல்வி தழுவினாலும் இந்தியாவுக்காக இன்னொரு பதக்கமாக வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.
அரையிறுதியில் துருக்கி வீராங்கனை சர்மெனேலி 5-0 என்று வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். ஆனால் போராடி தோல்வி கண்ட லவ்லினா வெண்கலப் கி;பதக்கம் வென்றார்.
இதன் மூலம் இந்தியா டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் 2 வெண்கலம், ஒரு வெள்ளியுடன் 3 பதக்கங்கள் பெற்றுள்ளது.
மீராபாய் சானு வெள்ளி, பி.வி.சிந்து வெண்கலம், அடுத்து லவ்லினா என்ற 3வது பெண் இந்தியாவுக்கு வெண்கலம் வென்று தந்துள்ளார். வெல்ட்டர் வெய்ட் 69 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் லவ்லினா போர்கோஹெய்ன்.
அரையிறுதி முதல் சுற்றில் துருக்கி வீராங்கனை புசெனாஸ் சர்மெனேலி 5 ஜட்ஜ்களிடமிருந்தும் 10 புள்ளிகள் பெற லவ்லினா 9 புள்ளிகள் பெற்று நெருக்கமாக வந்தார்.
இரண்டாவது சுற்றிலும் அதே போல் சர்மெனேலி 5 ஜட்ஜ்களிடமிருந்து 10 புள்ளிகள் பெற லவ்லினா 9 புள்ளிகள் பெற்று நெருங்கி வந்து தோற்றார்.
அடுத்த சுற்றில் துருக்கி வீராங்கனை சர்மெனேலி மீண்டும் 10 புள்ளிகளை அனைத்து ஜட்ஜ்களிடமிருந்து பெற லவ்லினா 9,9,9, 8,8 என்று பெற்று பின் தங்கினார்.
இதனையடுத்து 0-5 என்று தோல்வி தழுவினாலும் வெண்கலம் வென்றார் லவ்லினா.லவ்லினா போர்கோஹெய்ன் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது