பவர்பிளேயில் பொளந்து கட்டிய மும்பை! முடிந்ததும் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள்!
கிரீனுடன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். வந்த வேகத்திலேயே சாண்ட்னர் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேற, மும்பை அணியின் ரன் வேகம் சரமாரியாக குறைந்தது. அடுத்து ஜடேஜா பந்து வீச்சில் கேமரூன் கிரீனும் அவுட் ஆகி வெளியேற 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது மும்பை அணி
ஐபிஎல் 2023 சீசனின் 12வது ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு துவங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த மைதானமான வான்கடேவில் களமிறங்கியது. டாஸ் முக்கியம் என கணிக்கப்பட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
டாஸ் வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் பங்கு பெற்ற டாஸில் வெற்றி பெற்றது தோனி. அவர் முதலில் சென்னை அணி ஃபீல்டிங் செய்யும் என அறிவித்தார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய வருமாறு அழைத்தார்.
களமிறங்கிய மும்பை சிங்கங்கள்
மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கினர் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இவர்கள் அணியின் ஸ்கோரை மின்னல் வேகத்தில் உயர்த்தினர்.
தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் இரண்டு பவுண்டரிகளை அடித்து அந்த ஓவரில் அணியின் ஸ்கோர் 10 ரன்களாக ஆக்கினார். அடுத்த ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீசினார். அந்த ஓவரில் 6 ரன்கள் குவித்தது மும்பை அணி. அடுத்து சிசன்டா மகளா 3வது ஓவரை வீசினார்.
3வது ஓவரில் இஷான் கிஷன் 3 பவுண்டரிகளை விரட்டி விட்டார். 4வது ஓவரை சிக்ஸருடன் வரவேற்ற ரோஹித், துஷார் தேஷ்பாண்டே வீசிய அதே ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
ரோஹித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து கேமரூன் கிரீன் களமிறங்கினார். தனது பங்குக்கு சில ரன்களை அடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் இஷான் கிஷன் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கிரீனுடன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். வந்த வேகத்திலேயே சாண்ட்னர் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேற, மும்பை அணியின் ரன் வேகம் சரமாரியாக குறைந்தது. அடுத்து ஜடேஜா பந்து வீச்சில் கேமரூன் கிரீனும் அவுட் ஆகி வெளியேற 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்திருந்தது மும்பை அணி.
திலக் வர்மா மற்றும் ஆகியோர் களத்தில் இருந்தனர்.