லக்னோ அணி படுதோல்வி! மும்பை அணி கலக்கல்!
மும்பை பந்து வீச்சில் வீழ்ந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. விக்கெட்டுகள் மளமளவென விழ, 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்று வெளியேறியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.;
மும்பை பந்து வீச்சில் வீழ்ந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. விக்கெட்டுகள் மளமளவென விழ, 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்று வெளியேறியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மும்பை அணியின் துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.
ரோஹித் சர்மா தனது விக்கெட்டை நவீன் பந்துவீச்சில் இழந்தார். அவர் 11 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
அடுத்த ஓவரிலேயே இஷான் கிஷன் 15 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அதன்பிறகு களமிறங்கிய கேமரூன் கிரீனுடன் சூர்யகுமார் இறங்கினார்.
கேமரூன் கிரீன் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து சூர்யகுமார் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். திலக் வர்மாவும் நவீன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன்பிறகு களமிறங்கிய டிம் டேவிட் 13 ரன்களும், வதேரா 23 ரன்களும், ஜோர்டன் 4 ரன்களும் எடுத்து அவுட் ஆக, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 182 ரன்கள் எடுத்தது.
சென்னை மைதானத்தில் இது மிகப்பெரிய ஸ்கோர் என்பதால் மும்பை அணி நம்பிக்கையுடன் பந்து வீச களமிறங்கியது.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்த அணியின் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் மட்டும் 27 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தார். மற்றவர்கள் மும்பை பந்துவீச்சை எதிர்கொள்ளவே பயந்தனர். முக்கியமாக ஆகாஷ் மத்வால் 4 விக்கெட்டுகளை வெறும் 4 ரன்கள் விட்டுகொடுத்திருந்த நிலையில் எடுத்தார்.
லக்னோ அணியின் ஸ்டொய்னிஸ், தீபக் ஹூடா, கிருஷ்ணப்பா கவுதம் என அடுத்தடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினர்.
மேயர்ஸ் 18, மான்கட் 3 , குருணால் பாண்டியா 8, பதோனி 1, பூரன் 0, கௌதம் 2, பிஸ்னாய் 3 என கடகடவென தனது விக்கெட்டுகளை இழந்தது லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி.