மும்பை இந்தியன்ஸ் வெற்றி! பெங்களூருவை வீழ்த்தியது!

6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி! பெங்களூருவை எளிதில் வீழ்த்தியது!;

Update: 2023-05-09 17:44 GMT

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனால் பெங்களூரு அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் பாஃப் டூப்ளஸிஸ் இருவரும் களமிறங்கினர்.

விராட் கோலி ஆரம்பமே அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். இதனால் அடுத்து பாஃப் உடன் அனுஜ் ராவத் இணைந்தார். அவரும் 1 பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். 2 விக்கெட்டுகளை இழந்ததும் பாஃப் உடன் மேக்ஸ்வெல் களமிறங்கினார்.

இருவரும் மும்பை அணி பந்து வீச்சை வெளுத்து எடுத்தனர். 41 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார் பாஃப் டூப்ளஸிஸ். அவர் 3 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகளும் எடுத்தார். 33 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார் மேக்ஸ்வெல். இவர் 4 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் எடுத்தார்.

அதன்பிறகு வந்தவர்களில் தினேஷ் கார்த்திக் மட்டும் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அவருக்கு பிறகு கேதார் ஜாதவ் 12, ஹசரங்கா 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

மும்பை அணி சார்பில் ஜேசன் பெஹண்டர்ஆஃப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

மும்பை அணியின் துவக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் களமிறங்கியிருந்தார் இஷான் கிஷன். ஆனால் ரோஹித் வெறும் 7 ரன்களில் அவுட் ஆனார். அப்போது இஷானுடன் ஜோடி சேர்ந்தார் சூர்யகுமார். இருவரும் நிலைத்து நின்று ஆடி பயங்கரமாக ரன் குவித்தனர்.

இஷான் கிஷன் 21 பந்துகளில் 42 ரன்களை எடுத்து அவுட் ஆனார். அடுத்து நேகல் வதேரா களமிறங்கினார். சூர்ய குமார் ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை தொடங்கினாலும் வதேராவைப் பார்த்து அவரும் வெளுக்கத் தொடங்கினார்.

35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்த சூர்யகுமார் அவுட் ஆனார். வைசாக் வீசிய பந்தை அடிக்க கேதார் ஜாதவ் கையில் போய் நின்றது பந்து. இதனால் அவருக்கு பிறகு டேவிட் களமிறங்கினார். ஆனால் அவர் முதல் பந்திலேயே அவுட் ஆனார். வைசாக் வீசிய பந்தை அவர் அடித்து நேராக மேக்ஸ்வெல் கையில் கொண்டு போய் சேர்த்தார்.

அவருக்கு பிறகு களமிறங்கனார் கேமரூன் கிரீன். சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை வதேராவிடம் கொடுக்க, அவர் சிக்ஸர் அடித்து மும்பை அணியை வெற்றி பெறச் செய்தார்.  

Similar News