MI Vs KKR IPL 2023 மும்பை வெற்றி பெற 186 ரன்கள் இலக்கு! வந்தார் ரோஹித் சர்மா!

186 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள மும்பை அணி அதிரடியாக விளையாடி வருகிறது.

Update: 2023-04-16 12:34 GMT

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் செய்யும் என முடிவெடுத்ததால் கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக ரஹமனுல்லா குர்பாஸ் மற்றும் நாராயணன் ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே நாராயணன் ஜெகதீசன் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சியளித்தார். நல்ல வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என ரசிகர்கள் வருந்தும்படி செய்துவிட்டார்.

அவரைத் தொடர்ந்து கொல்கத்தா அணியின் அடுத்த பேட்ஸ்மென்னாக களமிறங்கியது வெங்கடேஷ் ஐயர். இவர் இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் 8 ரன்கள் எடுத்திருந்த குர்பாஸும் அவுட் ஆக தனது பொறுப்பை உணர்ந்து ஆடத் துவங்கினார் வெங்கடேஷ் ஐயர்.

வெங்கடேஷ் ஐயர் ஒருபுறம் நிலைத்து நின்று அடித்து ஆட, மறுபுறம் நிதிஷ் ராணா 10 பந்துகளைச் சந்தித்து 5 ரன்களிலும், ஷர்துல் தாகூர் 11 பந்துகளைச் சந்தித்து 13 ரன்களிலும், ரிங்கு சிங்க் 18 பந்துகளில் 18 ரன்களை அடித்தும் அவுட் ஆகி வெளியேறினார்கள்.

வெங்கடேஷ் ஐயர் மும்பை அணி பந்து வீச்சாளர்களின் கணிப்பை தவிடு பொடியாக்கி எல்லா திசைகளிலும் பவுண்டரிகளை விரட்டினார். சிக்ஸர்களை பறக்கவிட்டார். மொத்தம் 6 பவுண்டரிகள் 9 சிக்ஸர்களை அடித்து 104 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார் வெங்கடேஷ். அவருக்கு பிறகு களமிறங்கிய ஆண்ட்ரூ ரஸல் 11 பந்துகளில் 21 ரன்களையும், சுனில் நரேன் 2 ரன்களையும் அடித்து களத்தில் நின்றனர்.

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்திருந்தது. மும்பை அணி சார்பில் ஹ்ரித்திக் ஷோகீன் 2 விக்கெட்டுகளையும், கேமரூன் க்ரீன், டுவன் ஜான்சென், ப்யூஸ் சாவ்லா, ரிலே மெரடித் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள மும்பை அணி அதிரடியாக விளையாடி வருகிறது.

இடம் Venue

வான்கடே மைதானம் Wankhede Stadium

தேதி மற்றும் நேரம் Date & Time

ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணி Sunday, April 16, 3:30 PM IST

ஒளிபரப்பு Telecast & Streaming Details

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ சினிமா Star Sports Network and JioCinema

ஆடுகளம் MI vs KKR Pitch Report

வான்கடே மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மென்களை விட ஸ்பின் பந்துவீச்சாளர்களுக்கு பெரிதும் உதவும் என கணிக்கப்படுகிறது. முதல் இன்னிங்ஸ் ஆடி பெரிய ஸ்கோரை எடுப்பது கொஞ்சம் கடினமான ஒன்றுதான். இந்த ஆடுகளத்தில் சேஸிங் செய்வதே எளிதானதாக இருக்கும்.

MI vs KKR Probable Playing XIs

Mumbai Indians (MI):

Ishan Kishan (wk), Cameron Green, Suryakumar Yadav(c), Tilak Varma, Tim David, Nehal Wadhera, Arjun Tendulkar,Hrithik shokeen, Piyush Chawla, Duan jansen, Riley Meredith

மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ):

இஷான் கிஷன் (வாரம்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ் (கேட்ச்), திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, அர்ஜுன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, டுவான் ஜான்சன், ரிலே மெரிடித்

Kolkata Knight Riders (KKR):

Rahmanullah Gurbaz (wk), N Jagadeesan, Nitish Rana (c), vengatesh iyer, Rinku Singh, Andre Russell, Sunil Narine, Shardul Thakur, Umesh Yadav, Lockie Ferguson, Varun Chakaravarthy

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR):

ரஹ்மானுல்லா குர்பாஸ் (வாரம்), என் ஜெகதீசன், நிதிஷ் ராணா (கேட்ச்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி

Tags:    

Similar News