லக்னோவை வெல்லுமா மும்பை? இன்று மோதல்!

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.;

Update: 2023-05-24 10:30 GMT

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

ஐபிஎல் 2023 தொடர் கடைசி கட்டத்தை எட்டி வருகிறது. இந்த வாரத்துடன் முடிய இருக்கும் இந்த போட்டியின் குவாலிஃபயர் 1 ஆட்டத்தில் சென்னை அணி குஜராத்தை வென்று முதல் ஆளாக இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டது.

இப்போது மிச்சமிருக்கும் 3 அணிகளில் எந்த அணி இறுதிப் போட்டியில் சென்னையை எதிர்கொள்ள காத்திருக்கிறது என்பதை நிர்ணயிக்கும் எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபயர் 2 போட்டிகள் மூலம் முடிவு செய்யமுடியும். அதற்கான எலிமினேட்டர் போட்டி இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் குருணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வென்று இறுதிப் போட்டியை நோக்கி பயணிக்க இரு அணிகளும் தயாராக இருக்கின்றன.

தொடரின் ஆரம்பம் முதல் லக்னோ அணி மிகச் சிறப்பாக விளையாடி வந்தது ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி அப்படி இல்லை. நடுவில் பல தோல்விகளையும் பெற்று இறுதியில் குஜராத் அணி, பெங்களூரு அணியை வீழ்த்த கடைசி வாய்ப்பில் உள்ளே நுழைந்துள்ளது. இதனால் மும்பை அணியை லக்னோ அணி எளிதில் வீழ்த்தும் என ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் மும்பை அணி தனது முழு பலத்தையும் இதுவரை காட்டவில்லை. லீக் போட்டிகளில் விளையாடியது வேறு அந்த அணி ப்ளேஆஃப் சுற்றில் எப்படி விளையாடும் என்பதை அவ்வளவு சீக்கிரம் யாரும் கணித்துவிட முடியாது.

இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிம், கேமரூன் க்ரீன் என பேட்ஸ்மென்கள் அணிவகுக்க, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, பெஹண்டராஃப், ஆகாஷ் மந்தல் என பவுலர்களும் மிரட்டுவார்கள். இதனால் மும்பை அணி பலம் வாய்ந்த அணியாக லக்னோ அணிக்கு சரியான போட்டியைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதேநேரம் லக்னோ அணியும் லேசுபட்டது அல்ல. சரியான நேரத்தில் கைக்கொடுத்து ஆடும் அளவுக்கு வீரர்களைக் கொண்டுள்ளது இந்த அணி. கே எல் ராகுலுக்கு பதிலாக அணியைத் தலைமை தாங்கிய குருணால் மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் என்பதே இருக்காது.

மைதான நிலவரம் Pitch Report

சென்னை சூப்பர் கிங்ஸின் ஹோம் கிரவுண்டான சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் முதல் பேட்டிங்கில் போதுமான அளவுக்கு ரன் குவிப்பதற்கு ஏதுவானதாக இருக்கும். ஆனால் போக போக ரன் வேகம் குறையவும் வாய்ப்பிருக்கிறது. டாஸ் வென்றால் பேட்டிங் எடுத்து 165க்கும் அதிகமான ரன்களை அடித்து, எளிதாக எதிரணியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Toss

மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் என்று கணிக்கப்படுகிறது. மும்பை அணி 20 ஓவர்களில் 7 முதல் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் வரை அடிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஒருவேளை லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தால் 160 ரன்கள் வரை அடிக்க வாய்ப்பிருக்கிறது.

LSG vs MI Probable Playing XIs

Lucknow Super Giants (LSG):

Quinton de Kock (wk), Kyle Mayers, Krunal Pandya (c), Prerak Mankad, Marcus Stoinis, Nicholas Pooran, Amit Mishra, Yash Thakur, Ravi Bishnoi, Mohsin Khan, Avesh Khan

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG):

குயின்டன் டி காக் (வாரம்), கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா (கேட்ச்), பிரேராக் மன்கட், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், அவேஷ் கான்

Mumbai Indians (MI):

Rohit Sharma (c), Ishan Kishan (wk), Cameron Green, Suryakumar Yadav, Nehal Wadhera, Tim David, Kumar Kartikeya, Chris Jordan, Piyush Chawla, Jason Behrendorff, Akash Madhwal

மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ):

ரோஹித் சர்மா (கேட்ச்), இஷான் கிஷன் (வி.கே.), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா, டிம் டேவிட், குமார் கார்த்திகேயா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால் 

Tags:    

Similar News