லக்னோ வெற்றி பெற 122 ரன்கள் இலக்கு!
கடைசி நேரத்தில் கைக்கொடுத்த சமத். 20 ஓவர்களில் 121 ரன்கள் அடித்தது ஹைதராபாத்.;
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. முதலில் பேட் செய்ய ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்களான அன்மோல் ப்ரீத் சிங் மற்றும் மயாங் அகர்வால் ஆகியோர் களமிறங்கினார்கள்.
அன்மோல் ப்ரீத் கொஞ்சம் நிலைத்து நின்று ஆடினாலும் மயாங்க் அகர்வால் 7 பந்துகளைச் சந்தித்து 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். குருணால் பாண்டியா வீசிய பந்தை அடிக்க முயற்சிக்க மார்கஸ் ஸ்டொய்னிஸ் கையில் அகப்பட்டது பந்து.
அன்மோலுடன் ராகுல் திரிபாதி சேர்ந்து 8வது ஓவர் வரை பார்ட்னர்ஷிப் செய்தனர். அணியின் ஸ்கோர் 50ஐ எட்டியதும் அவுட் ஆனார் அன்மோல் ப்ரீத் சிங். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்க்ரமும் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அதற்கு அடுத்த ஓவரிலேயே ஹாரி புரோக் வந்த வேகத்திலேயே வெளியேறினார். அதன் பிறகு ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 18வது ஓவரில் ராகுலும், 19வது ஓவரில் ரஷீத்தும் அவுட் ஆகினர். 20வது ஓவரில் உம்ரான் மாலிக்கும் அவுட் ஆகி வெளியேற 20 ஓவர்கள் முடிவில் 121 ரன்களை எடுத்தது ஹைதராபாத்.
ஹைதராபாத் அணி வீரர்கள் அப்துல் சமத் 21 ரன்களுடனும், புவனேஷ்குமார் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.