குல்தீப் யாதவ் செய்த சூப்பர் சாதனை! அனில் கும்ப்ளேவே இவருக்கு அப்றம்தானாம்!
இந்தியாவின் அதிவேக 150 விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முந்திக்கொண்டு இடம்பிடித்த குல்தீப்!;
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அபாரமாக விளையாடி வருகிறார். கடந்த இரண்டு போட்டிகளில் களம் இறங்கி மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இதுமட்டுமின்றி அவர் அனில் கும்ப்ளே சாதனையையும் எளிதாக கடந்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற கடந்த ஆட்டத்தில் குல்தீப் இக்கட்டான சூழ்நிலையில், முக்கியமான 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியை ரன் எடுக்க விடாமல் தடுத்தார். இதுமட்டுமின்றி நேற்ற நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் சமாளித்து ஆடிய குல்தீப் யாதவ் கடைசி இரண்டு விக்கெட்டுகளை விரைவாக எடுத்திருந்தார். இந்த விக்கெட்டுகள் நின்றிருந்தால் ஒரு வேளை வெற்றி எதிரணி பக்கம் கூட சென்றிருக்க வாய்ப்பிருந்திருக்கிறது. அதனைக் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்தியாவின் இடது கையில் லெக்ஸ்பின் வீசக்கூடிய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ். இப்படிப்பட்ட பந்துவீச்சு முறையை சீனா மேன் என்று கூறுவார்கள். காரணம் சீனாவை சேர்ந்தவர்கள் பந்து வீசினால் எப்படி இருக்குமோ அதை போல் இந்தப் பந்துவீச்சு முறை தோன்றும் என்று கூறுகிறார்கள். இவர் தற்போது ஒரு மைல்கல்லை கடந்துள்ளார்.
பொதுவாக இந்த முறை பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் எதிர் கொண்டு ரன்கள் அடிப்பது என்பது முடியாத காரியம். இந்த நிலையில் தோனி விக்கெட் கீப்பராக இருந்தபோது குல்தீப் யாதவ், சாகலும் அவருடைய அறிவுரையை கேட்டு விக்கெட் வேட்டைகளில் ஈடுபட்டார்கள். ஆனால் தோனி சென்ற பிறகு குல்தீப் யாதவ், சாகல் ஆகியோர் தங்களது இடத்தை அணியில் இருந்து இழந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கடின உழைப்பின் மூலம் குல்தீப் யாதவ் அபாரமாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை குல்தீப் பெற்றிருக்கிறார்.
80 ஒருநாள் போட்டிகளில் முகமது சமி இந்த மைல் கல்லை எட்டி முதலிடத்தில் இருக்க, 88 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை குல்தீப் வீழ்த்தி இருக்கிறார். ஜாம்பவானான அணில் கும்ப்ளே 106 போட்டிகளில் தான் 150 விக்கெட்டுகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதே போன்று உலக அளவில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர்கள் பட்டியலில் குல்தீப் யாதவ் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார்.
குல்தீப் யாதவின் அபாரமான பந்துவீச்சு இந்திய அணிக்கு பெரும் பலமாக உள்ளது. அவர் தனது சிறந்த பந்துவீச்சை தொடர்ந்தால், இந்திய அணி ஆசிய கோப்பை வெற்றியை நெருங்கிவிடும்