கொல்கத்தா திரில் வெற்றி! பஞ்சாபை வீழ்த்தியது

கொல்கத்தா அணியின் ரிங்கு, ரஸல் ஆட்டத்தால் கடைசி கட்டத்தில் திரில் வெற்றி பெற்றது.

Update: 2023-05-08 17:57 GMT

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனால் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியைத் துவங்கிய பிரப்சிம்ரன் 8 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். அதுவும் 3 பவுண்டரிகளின் மூலம் எடுத்தார். அவர் ஹர்சித் ரானா பந்துவீச்சில் ரஹமனுல்லா குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருக்கு பிறகு களமிறங்கிய பானுகா ராஜபக்ஷே டக்அவுட் ஆகி வெளியேற, அடுத்து லியாம் லிவிங்ஸ்டன் 9 பந்துகளில் 15 ரன்களை எடுத்தார். வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தில் அவரும் அவுட் ஆகி வெளியேறினார்.

ஜிதேஷ் சர்மா அடுத்து களமிறங்கினார் 18 பந்துகளில் 21 ரன்களை அடித்தார். அடுத்து சாம் கரண் 9 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இறுதி கட்டத்தில் தமிழக வீரர் ஷாருக் கான் மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் அதிரடி காட்டினர். 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஷாருக்கும், 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஹர்ப்ரீத்தும் அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது.

முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜேசன் ராய் மற்றும் குர்பாஸ் இருவரும் தங்கள் பங்குக்கு கொஞ்சம் ரன்களை அடித்து வைத்துவிட்டு கிளம்பினர். நிதிஷ் ராணா, ரஸல் இருவரும் பஞ்சாப் பந்து வீச்சை வெளுக்க கொல்கத்தா அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்து கொண்டே சென்றது. வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களிலும் குர்பாஸ் 15 ரன்களிலும் அவுட் ஆக, நிதிஷ் ராணா அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

கடைசி நேரத்தில் ரிங்கு சிங் மறறும் ஆண்ட்ரூ ரஸல் களத்திலிருந்து அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என நினைத்தபோது ரஸலின் விக்கெட்டை வீழ்த்தினார் ஜிதேஷ் சர்மா. ரன் அவுட் செய்யப்பட்ட நிலையில் ரஸலுக்கு பதிலாக உள்ளே நுழைந்தார் ஷர்துல் தாகூர். ரிங்கு சிங் கடைசி பாலில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரி அடித்து கொல்கத்தாவை வெற்றி பெறச் செய்தார். 

Tags:    

Similar News