கே.எல். ராகுலுக்கு கொரோனா தொற்று – வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் பங்கேற்பாரா?
K.L.Rahul infects covid-19 - உடற்தகுதியின் அடிப்படையில், அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் இத்தொடரில் நிச்சயம் பங்கேற்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
K.L.Rahul infects covid-19 - இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கே.எல். ராகுல் பங்கேற்கவில்லை. இந்நிலையில், ராகுலுக்கு சமீபத்தில் ஜெர்மனியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
K.L.Rahul infects covid-19 -உடற்தகுதியின் அடிப்படையில், அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் இத்தொடரில் நிச்சயம் பங்கேற்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
கொரோனா பாதிப்பு : இந்நிலையில், கே.எல். ராகுலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது. ஒருநாள் தொடருக்குப் பிறகு, ஜூலை 29ஆம் தேதி டி20 தொடர் துவங்க உள்ளது.
K.L.Rahul infects covid-19 - கே.எல். ராகுலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால், டி20 தொடரில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.