KKR vs CSK சென்னை அணி வெற்றி! கடைசி வரை போராடிய கொல்கத்தா அணி
49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். ரிங்கு சிங் கடைசி வரை போராடி அரைசதம் அடித்தார்.;
கொல்கத்தாவில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. சென்னை அணி டாஸை வென்றிருந்தாலும் முதலில் பவுலிங்கையே தேர்ந்தெடுத்திருப்போம் என சென்னை அணி கேப்டன் தோனி தெரிவித்திருந்தார்.
கொல்கத்தா அணி பவுலிங் செய்ய களமிறங்கியபோது , அங்கே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். துவக்கம் முதலே அதிரடி காட்டிய டெவான் கான்வே, ருத்துராஜ் இருவரும் மளமளவென ரன் சேர்த்தனர்.
20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அசத்தலான ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த ருத்துராஜ், சுயாஷ் சர்மா பவுலிங்கில் அவுட் ஆகி வெளியேறினார். அசந்த நேரத்தில் பந்தை ஸ்டெம்பில் தெறிக்கவிட்டார்.
அடுத்து அஜிங்யா ரஹானே தன் பங்குக்கு வெறித்தனமா ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் டெவான் கான்வே தனது 4வது அரைசதத்தை அடித்தார். 40 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அந்த நேரத்தில் களமிறங்கிய துபே அவரும் தன் பங்குக்கு வெறித்தன ஆட்டம் ஆடினார். 21 பந்துகளில் 50 ரன்களை அடித்துவிட்டு பெவிலியன் திரும்பினார்.
இதனிடையே ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். மறுபுறம் அஜிங்யா ரஹானோ அரைசதம் அடித்தார். தன் பங்குக்கு ஜடேஜாவும் 2 சிக்ஸர்களை விளாசினார். அடுத்த பந்தில் அவர் அவுட் ஆனார். இதனால் தோனி களமிறங்கினார்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி.
கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களான நாராயணன் ஜெகதீசன் மற்றும் சுனில் நரேன் களமிறங்கி அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது கொல்கத்தா அணி.
அவர்களுக்கு பிறகு வந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா சற்று நேரம் நிலைத்து நின்று ஆடினர். 20 ரன்களை எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார் வெங்கடேஷ். இவரைத் தொடர்ந்து ஜேசன் ராய் களமிறங்கினார்.
ஜேசன் ராயுடன் சேர்ந்து நிதிஷ் ராணாவும் அவ்வப்போது சிக்ஸர் பவுண்டரி அடித்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். ஆனால் 20- பந்துகளில் 27 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்தார் ரிங்கு சிங்.
ஜேசன் ராய், ரிங்கு சிங் பார்ட்னர்ஷிப் நிலைத்து நின்று ஆடினர். அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் அரை சதம் அடித்தார். சிக்ஸர்கள் பவுண்டரிகளுக்கு விரட்டி விரட்டி மிக வேகமாக ரன் சேர்த்தார் ராய். ஆனால் 26 பந்துகளைச் சந்தித்து 61 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனார். இதனால் கொல்கத்தா அணியின் நம்பிக்கை தகர்ந்தது.
இருந்தபோதிலும் ஆண்ட்ரூ ரஸல் மற்றும் டேவிட் வீசே ஆகியோர் சில மேஜிக்களை செய்ய முடியும் என சிலர் நம்புகிறார்கள். உடன் ரிங்கு சிங்கும் இருப்பதால் இலக்கை எட்ட கூடுமான வரை முயற்சிப்பார்கள் என ரசிகர்கள் நம்பினர்.
ஆனால் பதிரனா வீசிய பந்தில் உயர அடித்த ரஸல், துபேயிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இதனால் கொல்கத்தா அணியின் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் உடைந்து நொறுங்கியது. அடுத்து டேவிட் விசா களமிறங்கினார்.
கடைசி 3 ஓவர்களில் 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கொல்கத்தா கையில் 4 விக்கெட்டுகள் பாக்கி இருந்தன. அப்போது டேவிட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து உமேஷ் யாதவ் களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் 59 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 19 வது ஓவரை தீக்ஷனா வீசினார். அவர் வீசிய 3 வது பந்தை உமேஷ் யாதவ் அடிக்க நினைக்க அது கான்வே கையில் போய் அகப்பட்டுக் கொண்டது.
அவருக்கு பிறகு வருண் சக்ரவர்த்தி களமிறங்கினார். கடைசி ஓவரில் 56 ரன்கள் என்ற வாய்ப்பில்லாத இலக்கு வந்த நிலையில் இந்த ஆட்டத்திலும் சென்னை அணி வெற்றியை ருசிக்கிறது. 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை எடுத்துள்ளது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டம்
ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய நாள் நடைபெறும் 2வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள இருக்கிறது. தோனி தலைமையிலான சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா அல்லது நிதிஷ் ரானா தலைமையிலான கொல்கத்தா அணி வெற்றி பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்துமா என்பதை அலசுவோம்.
Match: Kolkata Knight Riders vs Chennai Super Kings
Date: 23rd April 2023
Venue: Eden Gardens, Kolkata, India
போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
தேதி: 23 ஏப்ரல் 2023
இடம்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா, இந்தியா
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் நேரலை ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம், அதே நேரத்தில் நேரலை மதிப்பெண்களை கிரிக்கெட் அடிக்டர் இணையதளத்தில் கண்டு ரசிக்கலாம்.
KKR vs CSK IPL 2023 போட்டி 33 முன்னோட்டம்:
டாடா ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஏப்ரல் 23ஆம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இது ஞாயிற்றுக்கிழமை டபுள் ஹெட்டரின் இரண்டாவது ஆட்டமாகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 4ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 8 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.355 உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மறுபுறம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, மேலும் 4 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.214 என புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.
நேருக்கு நேர் CSK vs KKR Head to Head
இந்த இரு அணிகளும் இதுவரை மொத்தம் 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களுக்குச் சாதகமாக 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்த இரு அணிகளுக்கும் இடையே மற்றொரு பெரிய சந்திப்பு இங்கு எதிர்பார்க்கப்படுகிறது.
KKR vs CSK IPL 2023 Match 33 Weather Report:
வெப்பநிலை 31°c
ஈரப்பதம் 28%
காற்றின் வேகம் 13 km/hr
மழைப்பொழிவு இல்லை
சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்:
இந்த விக்கெட்டில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 180 ரன்கள்
Kolkata Knight Riders: Jason Roy, Liton Das, Venkatesh Iyer, Nitish Rana©, Mandeep-Singh, Rinku Singh, Andre Russell, Sunil Narine, Umesh Yadav, Kulwant Khejroliya, Varun Chakravarthy
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஜேசன் ராய், லிட்டன் தாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா ©, மன்தீப்-சிங், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், குல்வந்த் கெஜ்ரோலியா, வருண் சக்ரவர்த்தி
Chennai Super Kings: Ruturaj Gaikwad, Devon Conway, Ajinkya Rahane, Moeen Ali, Shivam Dube, Ravindra Jadeja, MS Dhoni©, Matheesha Pathirana, Maheesh Theekshana, Tushar Deshpande, Akash Singh
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி ©, மதீஷா பத்திரனா, மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்