கரூர் மாநில இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-11-10 14:33 GMT

வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுடன் இறகு பந்து சங்க நிர்வாகிகள்.

கரூரில் தமிழ்நாடு மாநில அளவிலான இறகுபந்து போட்டிகள் நடைபெற்றது. இந்த இறகு பந்து போட்டியில் 420 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் பரிசு வழங்கிய பாராட்டி பேசினார்.

கரூர் மாவட்ட இறகு பந்து கழக செயலாளர் அருள் வரவேற்றார். தலைவர் பிசா சண்முகம் தலைமை வகித்தார். நடராஜ் அருணாச்சலம் டாக்டர் மாறன் முன்னிலை வைத்தனர். வெங்கடாசலம், சீனிவாசன், ரவிச்சந்திரன், செல்வன் கார்த்திகேயன் ,ஸ்டீபன் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொருளாளர் விவேகானந்தர் நன்றியுரை கூறினார். பத்திரிக்கையாளர் சிவராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம்-

ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஈஸ்வர், ஸ்ரீ வர்ஷன்,சபரீஷ்வரன், மணிகண்டன், பெண்கள் ஒற்றையர் பிரிவு -பிரகிருதி பரத், காயத்ரி காவியா, ரீவா.

ஆண்கள் இரட்டையர் பிரிவு- புருஷோத்தமன்- சரவணன், திலீபன்- வேம்பரசன், ஈஸ்வர்- கோகுல், அர்ஜுன் கிருஷ்ணன்- கணேஷ்குமார், பெண்கள் இரட்டையர் பிரிவு -ஸ்ரேயா -தன்யா, அனுஷா- லீவா, ரிதுவர்ஷினி- வேதவர்னா, பவதாரணி -சிருஷ்டி. கலப்பு இரட்டைப் பிரிவு- லோகேஷ் விஸ்வநாதன்- அனுஷா, சரவணன் கண்ணன் -அக்ஷயா, சசிகுமார் – ரிதுவர்ஷினி, அர்ஜுன் கிருஷ்ணன்- ஜெர்லின்.

ஒற்றையர் பிரிவில் முதல் பரிசு தலா ரூ 60,000, ஆண்கள், பெண்கள், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தலா ரூ. 60,000 பரிசு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News