கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி

கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் நாளை இறுதி போட்டி நடைபெற உள்ளது.

Update: 2024-05-26 15:02 GMT

கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான 64-வது அகில இந்திய எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பை மற்றும் பெண்களுக்கான 10-வது கரூர் வைஸ்யா வங்கி சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

நேற்று நடந்த மகளிர் போட்டியில் சவுத் வெஸ்டர்ன் ரயில்வே ஹூப்ளி-நார்தன் ரயில்வே நியூ டெல்லி அணிகள் விளையாடின. இதில் சவுத் வெஸ்டர்ன் ரயில்வே அணி 68-56 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. சவுத் வெஸ்டர்ன் ரயில்வே வீராங்கனை சத்யா 24 புள்ளிகள், நார்தன் ரயில்வே வீராங்கனை ரிம்பி 21 புள்ளிகள் எடுத்தனர்.

ஆண்களுக்கான ஆட்டத்தில் சென்ட்ரல் செகரட்டரியேட் நியூ டெல்லி- நார்தன் ரயில்வே நியூ டெல்லி அணிகள் மோதின. இதில் நார்தன் ரயில்வே வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றனர். ஸ்கோர்: 70-59

Tags:    

Similar News