ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன்

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Update: 2021-10-15 19:27 GMT

சென்னை சூப்பர் கிங்ஸ் (விளையாடும் லெவன்): ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (டபிள்யூ/சி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், டுவைன் பிராவோ, தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (விளையாடும் லெவன்): சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (w), இயோன் மோர்கன் (c), ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி

கொல்கத்தா அணியின் தலைவர் இயான் மோர்கனும், சென்னை அணி கேப்டன் டோனியும் டாஸ் போட்டனர். இதில் கொல்கத்தா அணி டாசில் வென்று பத்து வீச்சை தேர்வு செய்தது.

இதன் மூலம் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஓப்பனிங் பேட்ஸ் மேன்களாக ருதுராஜ் கெய்வாட்டும், டூ பிளெசிஸ் ஆகியோர் களம் இறங்கினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட்டு இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது.

ருதுராஜ் கெய்வாட் 32ரன்களையும், ராபின் உத்தப்பா 31ரன்களையும், டூ பிளெசிஸ் 86 ரன்களையும் எடுத்தனர். மெய்ன் அலி 37 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 193 எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் கொல்கத்தா அணி 2வது பேட்டிங் செய்தது.

சுப்மான் கில், வெங்டேஷ்ஐயர் ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களம் இறங்கினர். வெங்கடேஷ் ஐயருக்கு முதல் ஓவரிலேயே கேப்டன் டோனி கேச்சை தவறவிட்டு லைப் அளித்தார்.

இதன் பின்னர் ஆட்டம் சூடுப்பிடித்தது. பின்னர் தொடர்ந்து 10 ஓவர்களுக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதே நிலை நீடித்து இருந்தால் சென்னை அணி வெல்லுமா என்கிற நிலை ஏற்பட்டிருக்கும்.

தாக்குர் வீசிய பந்தில் வெங்கடேஷ் ஐயர் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். பின்னர் வந்த நிதிஷ் ராணா டக் அவுட் ஆனார். இதன் பின்னர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய சுப்மான் கில் தீபக் சாஹார் வீசிய பந்தில் எல்பிடபிள்யு முறையில் அவுட் ஆனார்.

தொடர்ந்து வந்த வீரர்கள் சொர்ப்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர். சென்னை அணி வீரர்கள் தீபக் சாஹர் ஒரு விக்கெட்டையும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுக்களையும், பிராவோ ஒரு விக்கெட்டையும், ஜடேஜா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் டோனி தலைமையிலான சென்னை அணி 4வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பிடித்தது.

இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி பரிசு தொகை கிடைத்தது.

Tags:    

Similar News