ஐபிஎல் ஏலம் 2023: ஐ.பி.எல். வீரர்கள் மினி ஏலம் 'விறுவிறு'

ஐபிஎல் 2023 ஏலம்: சாம் குர்ரான் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் முறையே ரூ.18.50 கோடி மற்றும் ரூ.17.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்;

Update: 2022-12-23 10:49 GMT

ஐபிஎல் ஏலம் 

இங்கிலாந்தின் சாம் குர்ரான் மற்றும் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் ஆகியோர் முறையே ரூ.18.50 கோடிக்கும், ரூ.17.50 கோடிக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏல சாதனையை முறியடித்தனர்.

இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்றார்.

முன்னதாக இங்கிலாந்தின் ஹாரி புரூக்கிற்கு ஏலத்தில் கடும் போர் நடந்தது. இறுதியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவரை ரூ.13.25 கோடிக்கு வாங்கியது.

  • வில்லியம்சன் ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார் .
  • சாம் கர்ரன் - 18.50 (பஞ்சாப் கிங்ஸ்)
  • கேமரூன் கிரீன் - 17.50 (மும்பை இந்தியன்ஸ்)
  • பென் ஸ்டோக்ஸ் - 16.25 (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • ஹாரி புரூக் - 13.25 (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
  • ஜேசன் ஹோல்டர் - 5.75 (ராஜஸ்தான் ராயல்ஸ்)


ஏலம் தொடங்கியதும் கேன் வில்லயம்சன் பெயர் முதலில் வாசிக்கப்பட்டது. அதன்படி அடிப்படை விலையாக ரூ.2 கோடிக்கு குஜராத் அணி அவரை ஏலத்தில் எடுத்தது

இங்கிலாந்து வீரர் ஹார்ரி புரூக்கை ரூ.13.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

மயங்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கு, ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

ரஹானேவை ரூ. 50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி

சாம் கரணை வாங்க முக்கிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. பின்னர் சாம் கரணை ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டரை, ரூ.5.75 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது

ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை, ரூ.17.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி

பென் ஸ்டோக்ஸை, ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

நிக்கோலஸ் பூரனை 16 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி

தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசெனை ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இங்கிலாந்து வீரர் பில் சால்ட்டை ரூ.2கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி

முதல் சுற்று ஏலத்தில் இங்கிலாந்து வீரர் க்றிஸ் ஜோர்டன் , தென் ஆப்பிரிக்கா வீரர் ரைலி ரூசோ, வங்காளதேச வீரர் லிட்டன் தாஸ், இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை 

Tags:    

Similar News