ஐபிஎல் ஏலம்: ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா

பெங்களூருவில் ஐபிஎல்- 2022 ஏலம் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.;

Update: 2022-02-12 07:30 GMT

பெங்களூருவில், ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம், சற்று முன்பு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவை பஞ்சாப் அணி ரூ.9.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ரபடாவை ஏலத்தில் எடுக்க குஜராத் அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் கடும் போட்டி நிலவியது.ஷி

ஷிகர் தவான்

கடந்த ஐபிஎல் தொடரில், தமிழக வீரர் ஆஸ்வின் ரவிச்சந்திரன் டெல்லி அணிக்காக விளையாடி நிலையில், இம்முறை ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது. ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. டெல்லி கேப்பிடல்சிலிருந்து ஷிகர் தவான் பஞ்சாப் கிங்ஸுக்கு மாறியுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அதேபோல், ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்சை, ரூ.7.25 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. மற்ற வீரர்களின் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News