IPL 2023 பர்பிள் தொப்பி யாருக்கு? Latest Update
ஐபிஎல் 2023 பர்ப்பிள் தொப்பியை பெறும் போட்டியில் இப்போது இருக்கும் பத்து பேரை அட்டவணையில் பார்க்கலாம்.;
ஐபிஎல் 2023 போட்டித் தொடர் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கு பர்ப்பிள் தொப்பி வழங்கப்படும். அந்த வகையில் யார் அதிக விக்கெட்டுகள் எடுக்கிறார்களோ அவர்களுக்கு இந்த தொப்பி மாறிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் போட்டி முடிந்ததும் இந்த தொப்பி வழங்கப்படும். இந்த முறை பர்ப்பிள் தொப்பியைப் பெற யார் யாரெல்லாம் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்போம்.
பொதுவாக அதிக விக்கெட்டுகள் எடுப்பவர்கள் ஸ்பின்னர்களாகவோ, பேசர்களாகவோ இருக்கலாம். இப்போது வரை ஸ்பின்னர்கள் நிறைய விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு சிலரும் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
மார்க் வுட், ரஷீத் கான், ரவி பிஸ்னாய், முகமது ஷமி, யஸ்வேந்திர சாஹல், மொயின் அலி, அல்சாரி ஜோசப், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் என பந்து வீச்சாளர்கள் முதல் பத்து இடங்களைப் பிடித்திருக்கிறார்கள்.
ஐபிஎல் 2023 பர்ப்பிள் தொப்பியை பெறும் போட்டியில் இப்போது இருக்கும் பத்து பேரை அட்டவணையில் பார்க்கலாம்.
வீரர் | விக்கெட்டுகள் | அணி |
முகமது சமி | 26 | குஜராத் |
ரஷீத் கான் | 25 | குஜராத் |
யஸ்வேந்திர சாஹல் | 21 | ராஜஸ்தான் |
துஷார் தேஷ்பாண்டே | 21 | சென்னை |
பியூஷ் சாவ்லா | 20 | மும்பை |
வருண் சக்ரவர்த்தி | 20 | கொல்கத்தா |
ரவீந்திர ஜடேஜா | 19 | சென்னை |
முகமது சிராஜ் | 19 | பெங்களூரு |
மொஹித் சர்மா | 16 | குஜராத் |
மதீஷ் பதிரனா | 17 | சென்னை |