IPL 2023 Points Table முதலிடத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

ஐபிஎல்லின் இந்த ஆண்டுக்கான தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகள் மோதும் இந்த தொடர் ஏப்ரல், மே இரண்டு மாதங்கள் முழுக்க நடைபெற இருக்கிறது.

Update: 2023-04-12 08:30 GMT

ஐபிஎல்லின் இந்த ஆண்டுக்கான தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகள் மோதும் இந்த தொடர் ஏப்ரல், மே இரண்டு மாதங்கள் முழுக்க நடைபெற இருக்கிறது. IPL Points Table 2023


Match 1 : CSK Vs GT

முதல் ஆட்டத்திலேயே குஜராத் அணியை எதிர்கொண்டு தோல்வியடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நிதானமாக ஆடிய வீரர்களால் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களே எடுக்க முடிந்தது. ஆனால் குஜராத் அணி இந்த இலக்கை எட்ட பெரிய மெனக்கெடல் எதுவும் எடுக்கவில்லை.

இரண்டாவது நாள் மொத்தம் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. IPL 2023 Points Table


Match 2 : PBKS Vs KKR

முதல் ஆட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோத, இரண்டாவது ஆட்டத்தில் லக்னோ - டெல்லி அணிகள் மோதின. இதில் பஞ்சாப், லக்னோ அணிகள் வெற்றியை ருசித்தன.

பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா அணி டிஎல்எஸ் முறையில் தோல்வியடைந்தது. 191 ரன்கள் இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணியால் 16 ஓவர்களில் 146 ரன்களே எடுக்க முடிந்தது.IPL Team Rankings Result 2023


Match 3 : LSG Vs DC

மற்றொரு ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி வீரர்கள் சிறப்பாக ஆடி, 193 ரன்களைக் குவித்தனர். அடுத்து களமிறங்கி டெல்லி அணியால் 143 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் லக்னோ அணி வெற்றி பெற்றது.

India Premier League 2023 Points Table

Match 4 : RR Vs SRH

ஞாயிற்றுக் கிழமை நடந்த முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் மோதல் நிகழ்ந்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 203 ரன்களைக் குவிக்க, அடுத்து ஆடிய ஹைதராபாத் அணி 131 ரன்களே அடித்து தோல்வியடைந்தது.

Match 5 : MI Vs RCB

இரண்டாவது ஆட்டம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவின் மும்பை அணிக்கும் கோலியின் பெங்களூரு அணிக்கும் இடையேயான ஆட்டம் என்பதால் சூடுபிடித்தது. முதலில் ஆடிய மும்பை அணி 171 ரன்கள் குவிக்க அடுத்து ஆடிய பெங்களூரு அணி அதை 17வது ஓவரிலேயே எட்டி அமர்க்களப்படுத்தியது.

IPL 2023 News

Match 6 : CSK Vs LSG

திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. தோனியின் அதிரடியான பேக் டு பேக் இரண்டு சிக்ஸர்களோடு சென்னை அணிக்கு இந்த ஆண்டின் முதல் வெற்றியாக இது அமைந்தது.

India Premier League Team Rankings

Match 7 : DC Vs GT

செவ்வாக்கிழமை டெல்லி அணியை, குஜராத் அணி சந்தித்தது. இது இருவருக்கும் இரண்டாவது போட்டியாகும். ஏற்கனவே லக்னோவிடம் தோல்வியடைந்த டெல்லி அணி, சென்னை அணியை வென்றிருந்த குஜராத்துடன் மோதியது. இதில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இது இந்த அணிக்கு 2வது வெற்றியாகும். டெல்லி இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. 

Match 8 : PBKS Vs RR

புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆடியது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 197 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் ராஜஸ்தான் அணியால் 192 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 5  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. 

IPL 2023 Team Rankings

Match 9 : KKR Vs RCB

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 204 ரன்கள் எடுத்தது. 205  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 123  ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

2023 IPL Team Standing

Match 10 : SRH Vs LSG

டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி எளிதாக வென்றது. 

Match 11 : RR Vs DC

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 199 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஆடிய டெல்லி அணியால் 20  ஓவர்களில் 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

Match 12 : MI Vs CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியடைந்து. முதலில் ஆடிய மும்பை அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிதாக இலக்கை எட்டியது சென்னை. 

IPL 2023 POINTS TABLE

TEAMMATCHESWINLOSSPOINTSNRR
LSG4316

+1.048

RR3214

+2.067

KKR

3214

+1.375

GT

3214

+0.431

CSK

3214

+0.356 

PBKS

3214

-0.281 

RCB3122

-1.256

MI3122

-1.502

SRH

3122

-1.394 

DC

4040

-2.092


Tags:    

Similar News